174

நச்.

இஃது உரிச் சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது.

இ-ள் : கிளந்த அல்ல அன்ன பிறவும் -சொல்லப்பட்டனவேயன்றி
அவை   போல்வன   பிறவுமாய்,  பன்முறையானும் பரந்தனவரூஉ-ம்
உரிச்சொல் எல்லாம்-ஈறுபற்றி உணர்த்தற்கு அடங்காது பலவாற்றானும்
பரந்து  வரும்  உரிச்சொல் எல்லாம், பொருட்குறை கூட்டபொருளைச்
சொல்  இன்றியமையாக் குறைபாடு தீரப் பொருளை அதனோடு கூட்டி
உணர்த்த,   இயன்ற   மருங்கின்   இனைத்தென   அறியும்  வரம்பு
தமக்கின்மையின்- இசை குறிப்பு பண்பு பற்றித் தாம் இயன்ற  நிலத்து
இத்துணையென  வரையறுத்  துணரும் எல்லை தமக்கு  இன்மையான்
எஞ்சாமல்     கிளத்தல்      அரிது      ஆகலின்,      வழிநனி
கடைப்பிடித்து-அவற்றை  அறிவதற்கு  ஓதிய  வழிகளைச்  சேராமல்
மிகவும்  கடைப்பிடித்து,  ஓம்படை ஆணையிற் கிளந்தவற்று இயலாற்
பாங்கு உற உணர்தல் என்மனார் புலவர்- பாதுகாவலாகிய ஆணையிற்
கிளந்தவற்றின்  இயல்பாலே  அவற்றையும்  பகுதியுற  உணர்க என்று
சொல்லுவர் புலவர், எறு.

‘ஆதலால் யானும்  அவ்வாறே   கூறினேன்’   என்றார்   எனக்
குறிப்பெச்சமாக வுரைக்க.

எனவே,

‘பெயரினும் வினையினும் மெய்தடுமாறி’ (உரி. 1)

எனவும், 

      ‘முன்னும் பின்னும் வருபவை நாடி’ (உரி. 1)

எனவும் யான் கூறிய நெறியைச் சோராமல்கடைப்பிடித்து,

   ‘எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல் (உரி. 1) எனவும்,

   ‘ஒத்த மொழியால் புணர்த்தனர் உணர்த்தல்
   தத்த மரபின் தோன்றுமன் பொருளே’ (உரி. 91)

எனவும் என்னால் தரப்பட்ட  பாதுகாவலாணையால்  கிளந்தவற்று
இயலால் பாங்குற உணர்க’ என்பது இதன் கருத்தாயிற்று.

உரிச்சொல்     எல்லாம்   கூட்டவரம்பு   தமக்கு   இன்மையின்
கடைப்பிடித்து  இயல்பாகவே  அவற்றை  உணர்க என வினை முடிபு
கொள்க.