‘இருமை’ என்பது கருமையும் பெருமையுமாகிய குறிப்பும், ‘சேண்’ என்பது சேய்மையாகிய குறிப்பும், ‘தொன்மை’ என்பது பழமையாகிய குறிப்பும் உணர்த்தலும்; ‘இவறல்’ உலோபமும், ‘நொறிலியற் புரவி அதியர் கோமான்’ என ‘நொறில்’ நுடக்கமும், ‘நொறிலியற் புரவிக் கழற்கால் இளையோர்’ என ‘நொறில்’ விரைவும், ‘தெவிட்டுதல்’ அடைதலும், ‘மலிதல்’ நெருங்குதலும், ‘மாலை’ குற்றமும் உணர்த்தலும்; பிறவும் ‘கிளந்தவல்ல’ என்பதனால் கொள்க. உரியியல் முற்றும். வெள். இஃது உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. இ-ள் : (இங்குச் சொல்லப்பட்ட உரிச்சொற்களேயன்றி) அவை போல்வன பிறவும் பல நெறியானும் பரந்து வழங்கும் உரிச்சொல் எல்லாம், பொருளொடு புணர்த்து உணர்த்த இசை குறிப்பு பண்பு பற்றித் தாம் இயன்ற நிலத்து இன்ன அளவினவென வரையறுத்துணரும் எல்லை தமக்கு இல்லாமையால் முழுவதும் எடுத்துரைத்தல் அரிதாகலின் அவற்றை யறிதற்குச் சொல்லப்பட்ட வழிகளை நெகிழாமற் கடைப்பிடித்து என்னாற் கூறப்பட்ட பாதுகாவல் ஆணையாற் சொல்லியவற்றியல்போடும் சொல்லாதொழிந்தவற்றை முறைப்பட உணர்க, எ-று. வழி என்றது ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய் தடுமாறி’ எனவும், ‘முன்னும் பின்னும் வருபவை நாடி’ எனவும் முன்னர்க் கூறப்பட்ட சொற்பொருளுணரும் நெறியை. ‘ஓம்படையாணை’ என்றது ‘எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்’ எனவும், ‘ஒத்த மொழியாற் புணர்த்தனருணர்த்தல் எனவும் முன்னர்க் கூறப்பட்ட பாதுகாவலாணையினை. ‘உரிச்சொல் எல்லாம் கூட்ட வரம்பு தமக்கு இன்மையின் வழி கடைப்பிடித்து இயலான் உணர்தல்’ என வினைமுடிபு செய்க. இருமை என்பது கருமையும் பெருமையும் உணர்த்துதலும், சேண் என்பது சேய்மையுணர்த்துதலும், இவறல் என்பது உலோபம் உணர்த்துதலும், நொறில் என்பது ‘நொறிலியற் |