176

புரவி     யதியர் கோமான்’  என  நுடக்கமும்,  ‘நொறிலியற் புரவிக்
கழற்கால்  இளையோர்’  என  விரைவும்  உணர்த்துதலும், தொன்மை
என்பது  பழமையுணர்த்துதலும்,  தெவிட்டுதல்  அடைதலும்,  மலிதல்
நெருங்குதலும்,    மாலை    குற்றமும்    உணர்த்துதலும்,   பிறவும்
இச்சூத்திரத்துக் ‘கிளந்தவல்ல’ என்பதனாற் கொள்ளப்படும்.

ஆதி

இத்தகைய     பிற சொற்களையும் இங்குக்   கூறப்பெறாமல்  பல
வகையாலும்  தோன்றும் உரிச்சொற்களையெல்லாம் இத்துணையென்று,
வரம்பு    கட்டுதல்    பொருளுக்கும்   குறையுண்டாக்கும்;   வரம்பு
கொள்ளாது;  ஆதலின்  மரபு  முறை கடைப்பிடித்து, நல்ல அரணாக
அமைந்த சூத்திரங்களிற் கூறிய முறையால் நன்கு உணர்க.

பொருள் குறை கூட்ட - உரிச்சொற்கு  வரம்பு  கட்டுதல் அதற்குக்
குறை உண்டாக்குவதாகும்.

ஆணை-விதி; சூத்திரம்; அவை நமக்கு ஓம்படை- காக்கும் அரண்.
கிளந்த- அல்ல சொல்லப்படாதன :

நறு நாகு இறை அற  ஆற்றவும் நொறில் இருமை துப்புரவு அவிர்
சால் துவர பம்புவெறி மட பொன் வடி வால் வான் பிற,

சுருங்கக் கூறின்,
பெயர்ச்சொல் வினைச்சொல் இரண்டும் இல்லது
பெயர் வினைகட்கு அடையாய் உள்ளதும்
பெயர்வினைச் சொற்கள் இயற்பொரு ளன்றிப்
பயில்முறை மரபோடு பிறபொருள் தருவதும்
உரிச்சொல்; அஃது உரு உறழவும் பெறுமே.

முற்றியது.

உரியியல் உரைவளம் முற்றும்.