டாஞ் சூத்திரத்துத் தோற்றுவாய் செய்து கொண்டு, இவ்வியலில் 3 முதல் 91 வரையுள்ள சூத்திரங்களால் ‘உறு’ என்பது முதல் ‘எறுழ்’ என்பதீறாக நூற்றிருபது உரிச்சொற்களை எடுத்தோதிப் பொருளுணர்த்துகின்றார். 92 முதலாக இவ்வியலின் பின்னுள்ள சூத்திரங்களால் உரிச்சொற்களின் பொருளுணருமுறையும் பொருளுணர்த்து முறையும் முதலாயின உணர்த்தப் பெறுகின்றன. ஆதித்தர் உரிச்சொல் பற்றிச் சொல்லும் இயல் உரியியல். உரிச்சொல்லாவது என்னை? தனியுரிமை பெற்ற சொற்கள். என்ன தனியுரிமை? விளக்குதும். சொற்கள் பெயர் வினை என இருவகைப்படும். அவற்றோடு இடம் பெற்றுப் பொருள் தரும் சொல் இடைச்சொல் எனப்படுகிறது. பெயர் வினை இடை மூன்றும் இன்றி, மொட்டை மரம் போல நிற்கும் சொற்கள் சில தெளிவான பொருளுடையன. ஆனால் முடிந்த பொருளுடையனவல்ல. ஆயினும் தனிச் சொல்லாகக் கருதப்படுகின்றன. இஃது அவற்றின் தனிச்சிறப்பு; தனியுரிமை. இவ்வுரிமையால் அவை உரிச்சொல் என்று பெயர் பெற்றன.
எறுழ், கதழ், கமம், கய, குழ, கெழு, தட, துய, துனை, நளி, நனி, பணை, புனிறு, பேம், மல்லல், மழ, முழு, யாணர், யாண், வய, வியல்இவை பெயர்ச்சொற்களோ? அல்ல. இவற்றுக்குப் பொருள் உண்டோ? உண்டு. அஃதே இவற்றின் தனியுரிமை, இவை பெயர்ச்சொல் வினைச் சொற்களுக்கு அடை மொழியாக நிற்கும் தனிச்சொற்கள். இது ஒரு தனியுரிமை. இன்னும் கூறுவாம். |