இவ்வாறு உலகவழக்குப் பொருள் ஒன்றிருக்க, இலக்கியக் கருத்தாக்கள் தனியுரிமையுடன் தரும் தனிப்பொருள் கொண்ட சொல் உரிச்சொல். உரிச்சொற்களை இரு விதமாகப் பிரிக்கலாம். 1. அடைமொழி 2. நடைமுறை. அடைமொழி, நடைமுறை உரிமை கொண்ட சொற்களை ஆசிரியர் விளக்கும்முறையை இனிக் காண்பாம். தே. ஆண்டியப்பன் தொல்காப்பியர் உரிச்சொல்லை அறிமுகப்படுத்துவதின் நோக்கம் வேறு என்பதைப் பெயரியல் அமைப்பால் அறியலாம். பெயர் வினை இரண்டையும் திணை அடிப்படையில் பாகுபடுத்துவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிண யென்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே என்று சொற்கள் இருதிணைவழி ஐம்பாலாக இசைப்பதைக் கூறுகிறார். அப்போது வினையி்ல் தோன்றும் பாலறி கிளவியும் பெயரில் தோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா மரபின என்பதை எடுத்துரைத்துச் சொற்றொடரில் பால் இட திணை இயைபு இருக்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்துகிறார். எனவேதான் பெயர்வினை இரண்டையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமைய என்று மூவகைப்படுத்தினார். உயர்திணை என்றாலும் அஃறிணை யென்றாலும் சுட்டிக் காட்டப் பெறும் பொருள் (+ Concrete) ஆகும். குணப்பண்பும் தொழிற்பண்பும் சுட்ட இயலாதவை, ( concrete) ஆதலின் இத்திணைப்பாகுபாட்டில் அடங்குவதில்லை. மரம் செடி கொடி மண் வலை மனிதன் என்பனவற்றை நாம் சுட்டி யுணர்த்துவதுபோல், அன்பு தனிமை கறுப்பு புதுமை முதலிய பண்புப் பெயர்களையும், வார்தல் ஒழுகல் தீர்த்தல் தீர்தல் முதலிய தொழிற்பெயர்களையும் சுட்டி உணர்த்த இயலாது. அதனால் திணை அடிப்படையில் விளக்க இயலாது போயிற்று. தனியியல் ஒன்று தேவைப்பட்டுவிடுகின்றது. (காப்பியர் நெறி, சொல்லியல், பக் 122, முத்துப் பதிப்பகம், மதுரை, 1977.) வை. தங்கமணி பொருளைக் குறிப்பதால் பெயர். தொழிலைக் குறிப்பதால் வினை. பெயர் வினைகளின் இடையில் வருவதால் இடை. |