6தொல்காப்பியம் - உரைவளம்

தெளிவுப்     பொருள்    தருவதில்லை.    அதனால்   அதனைப்
பொருளுக்கு   உரியதாக்குதல்   வேண்டும்.  அப்போது,  அதனைப்
பெயரிலோ     வினையிலோ   சார்த்திஅல்லது    பெயர்போலவோ
வினைபோலவோ திரித்துப் பொருளுக்கு உரிமைப்படுத்தல் வேண்டும்.
அப்படி உரிமைப் படுத்தப்படும் சொற்களே உரிச்சொற்களாம். எனவே
உரிச்சொல்லாவது   பெயர்ப்பொருளுக்கோ  வினைப்  பொருளுக்கோ
உரிமைப்படுத்தப்படும்  சொல்  என்பதாம்.  ஆசிரியரும் ‘பெயரினும்
வினையினும்  மெய்  தடுமாறிப்  பொருளுக்கு  உரிமை தோன்றினும்’
எனப்  பொருளுக்குரிமை  தோன்றுவது  உரிச்சொல்  என்றார் என்க.
பொருளுக்கு  உரிமைப்படுத்தியவற்றை  ‘உறுதவ  நனியென  வரூஉம்
மூன்றும்  மிகுதி  செய்யும்  பொருளஎன்ப (உரி. 3) என்னும் சூத்திர
முதலாயினவற்றிற் காண்க.1 
 

உரிச்சொற் பொதுவிலக்கணம்
 

292.

உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
யிசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினு மெய்தடு மாறி
யொருசொற் பல்பொருட் குரிமை தோன்றினும்
பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்த மரபின் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்         (1)

(உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
ஒருசொல் பல்பொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தம்தம் மரபின் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் ஆயினும் பொருள்வேறு கிளத்தல்.)
 

ஆங்கில மொழி பெயர்ப்பு

இலக்குவனார்:  

If   ‘uriccol’ is defined. it will be found to have originated
from sound, suggestion and quality. Its form may be changed


1. தமிழ்க் கல்வி இயக்கக் கட்டுரைகள்
  தொகுப்பு :  ஆவுடை நாயகம், உலகத்தமிழ்க்  கல்வி  இயக்கம்,
  தமிழூர் 627808 (1986)