11

யெனக் கொள்க,  அவை  கூறியவாற்றாற் பொருட்குரியவாய் வருமாறு
முன்னர்க் காணப்படும்.

3மெய்தடுமாறலும்’  ஒரு சொற் பல பொருட்குரிமையும், பல சொல்
ஒரு  பொருட் குரிமையும்  உரிச்சொற்கு உண்மையான் ஓதினாரேனும்,
உரிச்சொற்கு   இலக்கணமாவது   இசை   குறிப்புப்   பண்பென்னும்
பொருட்குரியவாய் வருதலேயாம்.

ஒரு சொல் ஒரு பொருட்குரித்தாதல் இயல்பாகலாற் சொல்லாமையே
முடியும் என்பது.

தெய்வச்சிலையார்

இதன்     தலைச்    சூத்திரம்    என்னுதலிற்றோவெனின்,
உரிச்சொற்கெல்லாம்  உரியதோர்பொது  இலக்கணமும், அவற்றிற்குப்
பொருளுணர்த்துந் திறனும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் : ‘உரிச்சொற் கிளவி விரிக்குங்  காலை  என்பது
உரிச்சொல்லாகிய சொல்லை விரித்து உரைக்குங்காலத்து, என்றவாறு.

‘இசையினும்     குறிப்பினும்    பண்பினும்  தோன்றி’  என்பது’
1சொல்லானும்  குறிப்பானும்  பண்பானும் புலப்பட்டு, எறு. சொல்லாற்
புலப்பட்டது  உறு  என்பது. ‘இதனின் அஃதுறும்’ என்ற வழி ‘மிகும்’
என்னும் பொருள் புலப்பட்டது.

2குறிப்பாற்    புலப்பட்டது ‘கறுத்தான்’ என்பது. ஒருவன் மாட்டுக்
கருமையாகிய நிறத்தைக் குறியாது, அவனது வெகுட்சியைக் குறித்தலிற்
குறிப்பாயிற்று.


3. பெயர் வினை இடைச்சொற்களும் ஒரு சொற் பல பொருளிலும்
 பல    சொல்   ஒரு   பொருளிலும்    வருதலின்  இவ்வாறு
 எழுதினார்.         அன்றியும்       எல்லாவுரிச்சொற்களும்
 இப்படியமைவனவல்ல.   மெய்தடுமாறல்    என்பது    பெயர்
 வினைகளாகத்திரிதலை.

1.  இசை  என்பதற்கு  இவர்  சொல் எனப் பொருள் கொண்டார்;
 பிறர் ஒலி எனக் கொண்டனர்.

2. குறிப்பு என்பது  மனத்தாற்  குறித்துணரப்படுவது எனப் பிறர்
 கூற,இவர் குறிப்பாற் பொருள் உணர்த்துவது எனக் கொண்டார்.