12தொல்காப்பியம் - உரைவளம்

3பண்பாற்    புலப்பட்டது. ‘வெகுட்சிக்குக் கண் சிவக்கும்’ என்பது.
கண்ணின்  சிவப்பு அது சிவத்தற்குக் காரணமாகிய வெகுட்சியின்மேல்
வந்தது.

4இவையிற்றை  வடநூலாசிரியர்  முக்கியம்,  இலக்கணை, கௌணம்
என்ப.

சொற்    பொருள்படும்    வழிச்    சொல்லானும்   குறிப்பானும்
குணத்தானும்  பொருள்படும்  என்பதூஉம்,  ஈண்டுக்  கூறப்படுகின்ற
உரிச்சொல்   இம்மூவகையானும்  பொருள்  வேறுபடும்  என்பதூஉம்
கூறியவாறாம்.

‘பெயரினும் வினையினும் மெய் தடுமாறி’ என்பது உரிச்சொல்லாகிய
உருபு  பெயரின் கண்ணும் வினையின் கண்ணும் தடுமாறி எறு. அவை
தடுமாறுங்கால்,   பெயர்    வினைகளைச்    சார்ந்தும்  அவற்றிற்கு  
5
அங்கமாகியும்  வரும்.  ‘உறுவளி’ என்பது பெயரைச் சார்ந்து வந்தது.
‘உறக்  கொண்டான்  என்பது  வினையைச் சார்ந்து வந்தது. ‘உறுவன்’
என்ற   வழிப்   பெயர்க்கு  அங்கமாயிற்று.  ‘உற்றான்’  என்ற  வழி
வினைக்கு அங்கமாயிற்று.

‘ஒரு    சொற் பல் பொருட் குரிமை தோன்றினும், ‘பலசொல் ஒரு
பொருட்   குரிமை   தோன்றினும்’   என்பது   ஒரு   சொல்   பல
பொருட்குரித்தாகித்  தோன்றினும், பல்சொல் ஒரு பொருட்குரித்தாகித்
தோன்றினும், எறு.

ஒரு  சொல்  ஒரு   பொருட்  குரித்தாகி   வருதல்  சொல்லாமல்
முடிந்ததாம்.

‘பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தித், தத்த மரபிற்சென்று நிலை
மருங்கின்’ என்பது, உரிச் சொற்கள் தத்தம்


3. பண்பாவது  பொறியான்  உணரப்படும்  குணம் என்பர் பிறர்.
இவர்  பண்பு  கொண்டு ஒன்றன் பொருள் உணர்வது என்றார்.
வெகுட்சிக்குக் கண்  சிவக்கும்  ஆதலின்  அச்சிவப்புப் பண்பு
கொண்டு சிவந்தான்  என்பதற்கு வெகுண்டான் எனப் பொருள்
உணரப்படும் என்பது இவர் கருத்து.

4. முக்கியம் இன்றியமையாச் சொல், இலக்கணை ஏற்றிச்சொல்வது,
கௌணம் குணமுடையது.

5. அங்கமாகி    வருதல்   பகுதியாகி  வருதல்.   சேனாவரையர்
உரையில் 2ன் குறிப்புக் காண்க.