மரபினாற் சென்று நிற்குமிடத்து, வழக்கின்கட் பயின்று நடவாத சொற்களைப் பயின்ற சொற்களோடு சேர்த்தி, எறு. 6பயிலாத சொல்லாவன : உறு, தவ, நனி; பயின்ற சொல்லாவன : மிகுதல், உட்கு, உயர்வு என்பன. சார்த்துதலாவது இச்சொற்கள் இச்சொல்லின் பொருள்படும் எனக் கூட்டுதல். 7‘எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்’ என்பது, யாதானும் ஒரு சொல்லாயினும் பொருள் வேறுபடுத்திக் காட்டுக, எறு. தோன்றித் தடுமாறி என்னும் செய்தென் எச்சம் உரிமை தோன்றினும் என்னும் செயின் எச்சத்தினோடு ஒன்றிக் ‘கிளக்க’ என்னும் வியங்கோளோடு முடிந்தது.
6. உறு எனும் சொல் மிகுதல் எனும் பொருள்படும் எனக்கூறுதல் உட்கு (அச்சம்) எனும் பயின்ற சொல்லுடன் ‘உரு எனும் பயிலாத சொல்லைச் சார்த்தி ‘உருவுட்காகும்’ என ஆசிரியர் கூறியது காண்க. “வேறொரு முறையிலும் விளக்கலாம். தட, கய, நனி என்பன பெருமையுணர்த்தும். அப்பொருளே பயின்ற பொருள். தட என்பது கோட்டமும் ஆகும்; கய என்பது மென்மையும் ஆகும். நனி என்பது செறிவும் ஆகும் என்பார். இவை அதிகம் பயிலாத பொருள் எனலாம். அதனால் பயின்ற பொருளோடு பயிலாத பொருளையும் பார்க்க முடிகிறது.” ஆண்டியப்பன். இக்கூற்று ஏற்பதாகாது. தட என்பதற்குப் பயின்ற பொருளாகிய பெருமையைக் கூறிய ஆசிரியர் கோட்டம் என்னும் பயிலாத பொருளைக் கூறியதுபோல மாலை, ஒ, வம்பு, மாதர் போலும் சொற்களுக்கும் முன்னர்ப் பயின்ற பொருள்களைக் கூறிப் பின்னர் பயிலாத பொருள்களைக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாமை காண்க சிவ. 7. பொருள் வேறுபடுத்திக் காட்டுதல் பல பொருள் ஒரு சொல்லுக்கே பெரிதும் ஆம். கடி என்பது கடிமலர் என்னும் போது மணமலர் என்றும் ‘கடியென்றார் கற்றறிந்தார்’ (குறள்) என்னும்போது நீக்குதல் என்றும் பொருள் வேறுபடுத்திக் காட்டுதலாம். |