உரிச் சொற்கள் கிளவியை விரித்துரைக்குங் காலத்துச் சொல்லானும் குறிப்பானும் பண்பானும் பொருள் புலப்பட்டுப் பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் உருபு தடுமாறி, ஒரு சொற் பல பொருட்கு உரிமையாகித் தோன்றினும், பல சொல் ஒரு பொருட்கு உரிமையாகித் தோன்றினும், தத்தம் மரபிற் சென்று நிற்குமிடத்துப் பயிலாத சொற்களைப் பயின்ற சொற்களோடு சேர்த்தி யாதானும் ஒரு சொல்லாயினும் பொருள் வேறு படுத்தி உரைக்க, அறிவோர், எ-று. நச்சினார்க்கினியர் என்பது சூத்திரம். இச் சூத்திரம் உரிச் சாற்கு எல்லாம் பொது இலக்கணம் கூறுகின்றது. இதன் பொருள் : உரிச் சொற் கிளவி விரிக்குங் காலை உரிச் சொல்லாகிய சொல்லை விரித்து உணர்த்துமிடத்து, ஒரு சொல் பல் பொருட்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் அஃது ஒரு சொல் ஒரு பொருட்கு உரித்தாய் வாராது பல பொருட்கு உரித்தாய் மயங்கி வரினும் பல சொல் ஒரு பொருட்கு உரியவாய் மயங்கி வரினும், இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய் தடுமாறித் தத்த மரபிற் சென்று நிலை மருங்கின் இசைப் பொருண்மைக் கண்ணும் மனத்தாற் குறித்துணரும் பொருண்மைக் கண்ணும் பண்புப் பொருண்மைக் கண்ணும் வெளிப்பட்டுப் பெயர் வினைகள் போன்றும் அவற்றிற்கு முதல் நிலையாயும் தம் உருபு தடுமாறித் தத்தமக்கு உரிய முறைமையாற் சென்று நிற்கும் நிலைக்களங்களாலே, எச்சொல்லாயினும் பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருள் வேறு கிளத்தல் கேட்போனால் பொருள் உணரப்படாத எவ்வகைப்பட்ட சொல்லாயினும் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றோடு சேர்த்திப் பொருளை வேறு வேறு சொல்லுக என்றவாறு. ‘அது மயங்கிவரினும், 1நிலைக் களங்களாலே சேர்த்தி வேறு வேறு கிளத்தல்’ என வினை முடிபு செய்க. கறுப்பு, பெயர்ப் போலி தவ, வினைப் போலி துவைத்தல், பெயர்க்கு முதல் நிலை தாவாத, வினைக்கு முதல் நிலை
1. நிலைக்களங்கள் = பெயர் வினைகள். |