16தொல்காப்பியம் - உரைவளம்

உண்மைப் பொருள்  மாறி வரும், ஒரு  சொல்  பல பொருள் தந்தும்
பல சொல் ஒரு பொருள் தந்தும் வரும்; செய்யாததைச் செய்ததுபோல்
கற்பிக்கும்;  இஃது மரபு தழுவிப் பயிலப் பெற்று எல்லாச் சொற்களும்
வேறு பொருள் தந்து நிற்கும்.

இயம்பல்-சொல்லுதல்
அதிர்வு-முழக்கம்
சிலைத்தல்-ஒலித்தல்
முரஞ்சல்-ஒலித்தல் 

இவை ஒலி பற்றி வருவன.  ஆயின்  பிற உரிப் பொருள் தருவன
பின்னர்க் காண்போம்.

விறப்பு-அச்சம், உறப்பு-கிள்ளியெடுத்தல்

அலமரல்-அங்கலாய்த்தல்-இவை   குறிப்பு.  ஆயின் பிற பொருள்
தரும்.

கறுப்பு-கருமை, சிவப்பு-செம்மை, சிறுமை-சிறிய, செழுமை-செழிப்பு-
இவை பண்பு பற்றியவை; பிற பொருள் தரும்.

பெயர்ச் சொல் மாறிவரல்: பிணைமான், (உரி) விருப்பமான
            வம்பு-அக்கிரமம் (உரி) நிலையில்லா
            வாள்-கத்தி (உரி) நெளிபெற்ற

வினைச்சொல் மாறிவரல்; வைதிட்டு (உரி) கூர்மை
               விழு-விழுதல் (உரி) சிறந்த
               வீழ்-விழுதல் (உரி) விரும்புகிற
               கடி-கடிக்கின்ற (உரி) காவல் பெற்ற

ஒரு சொல் பல பொருள் தரல்: கடி-காவல், மணம், நீக்கு, கூர்மை,
அச்சம், விளக்கம், புதுமை.

பல  சொல் ஒரு பொருள்  தரல்:  சால,  உறு,  தவ,  நனி,  கூர்,
கழி-மிகுதி.

பயிலாதவற்றைப்  பயின்றதாக்கல்: இப்பாதை மதுரைக்குப் போகிறது.
பாதை   போகவில்லை;  நீளக்  கிடக்கிறது;  அதனைப்  போவதாகச்
சொல்வது  உரிச்  சொல்.  அதனைப் பயிலும் சொல்லோடு சேர்த்தல்.
நாகுஇளங்கன்று

மழகளிறு-மரபன்று