17

சொல் வேறுபொருள் தரல்:

கருவி-ஆயுதம் (உரி) தொகுதி
உரு-உருவம்   (உரி)  அச்சம்
மாதர்-பெண்   (உரி) காதல்
மாலை-மாலைப்பொழுது (உரி) வரிசை

சுப்பிரமணிய சாஸ்திரியார்

பொருள் : உரிச்சொற்கள்  தோன்றுமிடத்து  இசையும்  குறிப்பும்
பண்பும்    பற்றிப்   பெயர்க்கண்ணும்   வினைக்கண்ணும்   சென்று
பொருள்களை   விளக்கும்,   என்றவாறு.  மெய்  என்பது  பொருள்;
தடுமாறுதல் என்பது பெயர் பற்றியும் வினைபற்றியும் வரும் வரவினை
நோக்கி;   அவ்வாறு   தடுமாறுங்கால்  ஒரு   சொல்  பலபொருட்கு
உரிமைப்பட்டுத்    தடுமாறுதலும்   பல  சொல்   ஒரு   பொருட்கு
உரிமைப்பட்டுத்  தடுமாறுதலும்  உடைய, அவை அவ்வாறு தடுமாறித்
தோன்றுதல்   அவற்றிற்கு   இலக்கணம்;  அவ்வாறு  தோன்றுங்கால்
பயிலாத    உரிச்சொற்கள்    பயின்ற   உரிச்சொல்லோடு   சார்த்தி
உணரப்படும்.   அவ்வாறு   சார்த்திச்  சொல்லவே  எவ்வகைப்பட்ட
சொல்லாயினும் பொருள் விளங்கும்.

உரைகாரர்கள்      நால்வரும்   இச்சூத்திரம்    உரிச்சொல்லின்
இலக்கணத்தை  உணர்த்துகின்றது  என்றனர்.  பொருள்  கூறுமிடத்து
‘மெய்’  என்பதற்கு  உரையாசிரியர்  ‘பொருள்’  என்றும், ஏனையோர்
‘உருவம்’   என்றும்  கொண்டனர்.  ‘உயிரும்  புள்ளியும்  இறுதியாகி’
(எழுத்.   குற்றி.76)   என்ற  சூத்திரத்தில்  புணர்ச்சியில்  உரிச்சொல்
எவ்வாறு   மாறும்  என்பது  உணர்த்தப்  படவில்லை  என்பதனால்
சேனாவரையர் முதலியோர் கூறுவதே பொருந்தும்.

இச்சூத்திரம்      உரிச்சொல்லின்    இலக்கணங்   கூறியதாயின்
‘உரிச்சொற்கிளவி-இசையினும்   குறிப்பினும்   பண்பினும்  தோன்றும்’
என்றே  ஆசிரியர்  கூறியிருப்பர். ஏனையவற்றைச் சேர்த்திருத்தலால்
இச்சூத்திரம்   உரிச்சொல்லின்   இலக்கணத்தைக்   கூறாது   அதன்
தன்மையைக்  கூறிற்று  என்றலே பொருந்தும். அவ்வாறாயின் அதன்
இலக்கணம்  எதனாற் பெறுதும் எனின், பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல்  இவற்றின் இலக்கணம் அவ்வக் குறியாற் பெறப்பட்டன
என்றது  போலவே உரிச்சொல் என்ற  தொல்லோர் குறியானே அது
பெறப்பட்டது எனல் வேண்டும். உரிச்சொல் என்பதற்குப் “பெயரினும்
வினையினும்   இன்றியமையாதுரிய   பகுதியை   யுணர்த்துங்கிளவி”
என்பது பொருளாகும். அப்பகுதியைத் தெய்வச்