22தொல்காப்பியம் - உரைவளம்

பி. இ. நூ:

நன். 456:

சால வுறுதவ நனிகூர் கழிமிகல்

இல. வி. 281:

“உறுதவ நனியென வரூஉம் மூன்றும்
 மிகுதி செய்யும் பொருள ஆகலும்”

முத்து. ஒ. 27

உறுதவ நனிமிகுதிப் பொருளு ணர்த்தும்

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், குறிப்புப் பற்றித் தோன்றும்
உரிச்சொற்கள்    பலவாகலான்    அவற்றுப்    பகுதி    முற்கூறிய
தொடங்கினார்.

உரை :   இக்கூறப்பட்ட    மூன்று    உரிச்சொல்லும்   மிகுதிப்
பொருண்மையை விளக்கும், எ-று.

1‘உறுகால் ஒற்ற ஒல்கி’ (நற்.300)
என்பது மிகு கால் ஒற்ற ஒல்கி என்பதாம்.

‘தவச்சேய் நாட்டாராயினும்’ (நற். 115) என்பது மிகச் சேய நாட்டார்
என்பதாம்.

2‘நனிசேய்த்   தன்றவன்   பழவிறல்   மூதூர்’   என்பது   மிகச்
சேய்த்தன்று அவன் பழவிறல் மூதூர் என்பதாம்.

சேனா

வெளிப்பட வாரா உரிச்சொற்களைக் கிளந்தோதி விரிக்கின்றார்.  

‘அவைதாம்’ என்றது, வெளிப்பட வாரா உரிச்சொற்றாம் என்றவாறு.
அதற்கு   முடிவு  ‘அவைதாம் அம்மாம் எம்மேம் என்னும் கிளவியும்’
(வினை.5) என்புழி உரைத்தாங்குரைக்க


1. பொருள் : மிக்க காற்றுத் தாக்கத் தளர்ந்து  

2. பொருள் : மிக நெடுந்தொலைவிலுள்ளதன்று அவன்  பழைய
 வெற்றி கொண்ட மூதூர்.