24தொல்காப்பியம் - உரைவளம்

வெள்

(உரை வேறுபாடில்லை).  

ஆதி

உறு தவ  நனி  மூன்று சொற்களும்   மிகுதி  என்னும் பொருள்
தருவன.  உறுபுகழ்மிகப்புகழ்  (உற்ற  அல்ல)  தவப்பலர்  மிகப்பலர்
(தவஞ்செய்கிற அல்ல) நனி நொந்து மிக நொந்து.

சுப்

அவை தாம் என்பதனை அதிகாரச் சூத்திரமாகக் கொள்க.  

உரு, புரை
 

295.

1உருவுட் காகும் புரையுயர் பாகும்                 (4)

(உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Uru’ means fear and ‘Purai’ greatness.

ஆல்.

‘Uru’ means fear and ‘Purai’ means greatness.

பி. இ. நூ.

நேமி. சொ. 59

புரை யுயர்பாகும்.

முத்து. ஒ. 28

புரையுயர் பாகும் உருவுட்கா கும்மே

இளம்:

இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் குறிப்பு.  

வரலாறு : உருவக்  குதிரை  (அகம் 1) என்றக்கால்  2உட்கத்தக்க
குதிரை  என்பதாம்.  ‘புரைய  மன்ற  புரையோர்  கேண்மை’ (நற். 1)
என்பது உயர்ந்துயர்ந்தோர் கேண்மை என்பதாம். 


1. இதனை இரு சூத்திரமாகக் கொள்வர் தெய்வச் சிலையார்.

2. உட்கு-அச்சம்