26தொல்காப்பியம் - உரைவளம்

வெள்.

(உரை வேறுபாடில்லை)

ஆதி.1

உரு - உருவம் - அச்சம்
   புரை - ஒப்பு, குற்றம் - உயர்வான

குரு, கெழு
 

296.

குருவுங் கெழுவு நிறனா கும்மே.                   (5)

(குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே)
 

ஆ. மொ. இல.

‘Kuru’ and ‘Kelu’ denote Colour

ஆல்.

‘Kuru’ and ‘Kelu’ mean Colour

பி. இ. நூ.

இல. வி. 283 :

குருவும் கெழுவும் நிறனா குதலும்.

இளம்.

வ-று :2‘குருத்துளி பொழிந்தது’
           3‘கேழ்கிளர் அகலத்து’ (மதுரைக்காஞ்சி, 493)

என்றக்கால் அவையிரண்டினும் நிறம் சொன்னவாறு.


1. ஆதித்தர் உதாரணம் காட்டும்போது முதலில் உரிச்சொல்லையும்,
அடுத்து  அது  தரும்  வெளிப்படைப்  பொருளையும் பின்னர்
அது   உரிச்சொல்  நிலையில்  தரும் பொருளையும் காட்டுவர்.
அவர்  காட்டும்   வெளிப்படைப்   பொருள்  பொருந்துவதும்
பொருந்தாததும்  ஆங்காங்கே  அறிக,   புரை   என்பதற்குக்
காட்டப்பட்ட   ஒப்பு,    குற்றம்      என்னும்  பொருள்கள்
வெளிப்படையாக மக்களால் உணரப்படுவனவல்ல.

2.பொருள் : நிறத்தையுடைய (மழைத்) துளி பொழிந்தது.

3.பொருள் :நிறம் விளங்கு மார்பில்.