ஆ. மொ. இல. ‘Sellal’ and ‘innal’ mean distress ஆல். ‘Cellal’ and ‘innal’ mean distress பி. இ. நூ. இல. வி. 281. செல்லல் இன்னல் இன்னாமை செப்பலும். முத்து. ஒ. 29. செல்லலும் இன்னலும் இன்னா மையே. இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் இதுவும் குறிப்பு.
உரை : இவை இரண்டும் நோய்ப் பொருண்மைய ஆகும், எ-று. வ-று : 2‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22) என்புழி நோய் என்பதாம்.
1. தொல்காப்பியர் காலத்தில் குரு என்பது ஆசானுக்கு வழங்கப்படவில்லை. 2. பொருள் : மணங்கமழும் அகன்ற மார்பு வருத்திய துன்பம். |