2‘வெயில் புறந்தரூஉ-ம் இன்னல் இயக்கம்’ (மலை படு. 374) என்றவிடத்தும் அதுவாம். சேனா இ-ள் : ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22) எனவும், ‘வெயில் புறந்தரூஉ-ம் இன்னல் இயக்கத்து’ (மலைபடு. 374) எனவும் செல்லலும் இன்னலும், இன்னாமையென்னும் குறிப்புணர்த்தும், எ-று. தெய் இ-ள் : செல்லல் என்னும் சொல்லும் இன்னல் என்னும் சொல்லும் இன்னாமைப் பொருளில் வரும், எ-று. உ-ம் : ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ ‘வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து’ நச் இது, குறிப்பு இ-ள் : செல்லல் இன்னல் இன்னாமையே செல்லலும் இன்னலும் இன்னாமை என்னும் குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம் 22) ‘வெயில் புறந்தரூஉ-ம் இன்னல் இயக்கத்து’ (மலைபடு. 374) என வரும். வெள் இது குறிப்பு பற்றிவரும் உரிச்சொல் உணர்த்துகின்றது. இ-ள் : செல்லல் இன்னல் என்னும் உரிச்சொற்கள் இன்னாமை யென்னும் குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ ‘வெயில் புறந்தரூஉ-ம் இன்னல் இயக்கத்து’
2. பொருள் : குளிர்ச்சி வாராமல் வெயில் பாதுகாக்கும் இன்னாமை செய்யும் வழியிடத்தில் போம் பொழுது. |