30தொல்காப்பியம் - உரைவளம்

ஆதி

உ-ம் :

செல்லல் - செல்லுதல் - துன்பம்
1இன்னல் - 2 இனிமை + நல் - துன்பம்

மல்லல், ஏ
 

298.

3மல்லல் வளனே யேபெற் றாகும்.                 (7)

(மல்லல் வளனே ஏ பெற்று ஆகும்)
 

ஆ.மொ.இல.

‘Mallal’ means fertility; ‘Ē’ means abundance

ஆல்.

‘Mallal’ means fertilit and ‘E’ means abundance

பி. இ. நூ.

நேமி. சொ. 58

ஏ ஏற்றம் மல்லல் வளமை

முத்து. ஒ. 30

மல்லல் வளனே ஏ பெற்றாகும்.

இளம்

வ-று : ‘மல்லல்  மாமலை.  என்றக்கால்  வளனுடைய   பாமலை
என்பதாம்.  ‘ஏகலடுக்கம்’ (நற். 116) என்றக்கால் 4பெற்றிய கல்லடுக்கம்
என்பதாம்.

சேனா

இ-ள் : ‘மல்லல்   மால்வரை’ (அகம் 52) எனவும், ‘ஏகல்லடுக்கம்’
(நற்.116)   எனவும்   மல்லலும்   ஏவும்,   வளமும்    பெற்றுமாகிய
குறிப்புணர்த்தும், எ-று.


1. இன்னல்   என்பது    இனிமை  +  நல்  எனப்பிரிக்கப்பட்டுப்
பொருள் உணர்த்தும் என்பது வலிந்து கூறுதலாம்.

2. இனிமை + நல் எனப் பிரிப்பது தவ-று; ஒரு சொல்லாதலின்.

3. இதை     இரண்டு சூத்திரமாகக் கொள்வர் சேனா வரையரும்
தெய்வச்சிலையாரும்.  உரை    எழுதும்போது   இரண்டற்கும்
சேர்த்து ஒரே  சூத்திரம் போலக்  கொண்டு உரையெழுதினார்
சேனாவரையர்.

4.  பெற்றிய - பெருகிய.