பெற்று - பெருக்கம் இது அக்காலத்துப் பயின்றது போலும். இவை இரண்டு சூத்திரம். தெய். (மல்லல் வளனே) இ-ள் : மல்லல் என்னும் சொல் வளப்பம் என்னும் பொருள் தரும், எ-று. உ-ம் :மல்லல் மால்வரை (அகம் 52) (ஏ பெற்றாகும்) இ-ள் : ஏ என்னும் சொல் பெற்றுதல் என்னும் பொருள்படும், எ-று. உ-ம் : ‘ஏகலடுக்கம்’ (நற். 116) 1பெற்றுதல் என்பது இக்காலம் பற்றுதல் என வரும். நச் இதுவுமது. இ-ள்: மல்லல் வளனே மல்லல் செல்வம் என்னும் குறிப்பினையும், ஏ பெற்று ஆகும் ஏ என்பது பெருக்கம் என்னும் குறிப்பினையும் உணர்த்தும், எ-று. பெற்று அடுக்குதலுமாம். உ-ம் : ‘மல்லல் மார் படுத்தனன் புல்லுமா றெவனோ ‘ஏகல்லடுக்கத்து இருளளைச் சிலம்பின்’ (அகம் 52) என வரும். வெள் இவையும் குறிப்புப் பொருள் பற்றி வரும் உரிச்சொல் உணர்த்துகின்றன. இ-ள் : மல்லல் என்னுஞ் சொல் வளமும், ஏ என்னுஞ்சொல் பெருக்கமும் ஆகிய குறிப்புணர்த்துவன எ-று, பெற்றுபெருக்கம்.
1. ஒன்றையொன்று பெற்று (பற்றி)த் தொடர்ச்சியாதல் என்பது இதன் பொருள் போலும் சிவ. |