32தொல்காப்பியம் - உரைவளம்

உ-ம் : ‘மல்லல்  மால்வரை’  எனவும்,  ‘ஏகல்லடுக்கம்’  எனவும்
மல்லல் ஏ  என்பன   முறையே   வளமும்   பெருக்கமும்   ஆகிய
குறிப்புணர்த்தின.

ஆதி.

உ-ம் : மல்லல் - 1 பலத்த, வலிய - வளமான
          ஏ - அம்பு - பெருகிய

உகப்பு, உவப்பு.
 

299.

2 உகப்பே யுயர்த லுவப்பே வுவகை                (8)

(உகப்பே உயர்தல் உவப்பே உவகை)
 

ஆ.மொ.இல.

‘Ukappu means rising and ‘uvappu’, joy.

ஆல்.

‘Ukappu’ means rising ‘uvappu’ means joy.

பி. இ. நூ.:

முத்து. ஒ. 31

உகப்பே யுயர்தல் உவப்பே வுவகை.

இளம்.

வ-று : ‘நாடு  காண  மேன்மே  லுகமின்’  என்பது நாடு காணக்
கன்மே லேறினான்  மேன்மேல்  உயர்மின்   என்பதாம்.  ‘உவக்குந
ளாயினும் ஊடின ளாயினும் (அகம். 203) என்புழி  உவந்தனளாயினும்
என்பதாம்.


1. மல்லல் என்பதற்குப் பலத்த, வலிய எனப் பொதுப்  பொருள்
ஆட்சி காணப்படவில்லை.

2.இதனை இரு சூத்திரமாகக் கொள்வர் தெய்வச் சிலையார்.