33

சேனா.

இ-ள் : 1 ‘விசும்புகந்  தாடாது  எனவும்,    2 ‘உவந்துவந்தார்வ
நெஞ்சமொடு  ஆய்நல  னளைஇ’  (அகம்.  35)  எனவும்,  உகப்பும்
உவப்பும், உயர்தலும் உவகையுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

தெய்.

(உகப்பேயுயர்தல்)

இ-ள் : உகப்பு என்னும் சொல்  உயர்தல் என்னும் பொருள்படும்,
எ-று.

உ-ம் : விசும்புகந் தாடாது
       (உவப்பே உவகை)

இ-ள் : உவப்பு என்னும் சொல்  உவகை  என்னும் பொருள்படும்,
எ-று.

உ-ம் : உவந்துவந் தார்வ நெஞ்சமொடு (அகம். 35)

நச்.

இதுவுமது.

இ-ள் :  உகப்பே  உயர்தல்  உவப்பே  உவகைஉகப்பு  உயர்வு
என்னும்  குறிப்பினையும்  உவப்பு  உவகை  என்னும் குறிப்பினையும்
உணர்த்தும்,எ-று.

உ-ம் : ‘விசும்புகந் தாடாது  இரைதேர்ந்  துண்ணாது, ‘உவந்துவந்
தார்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇய’ (அகம் 35)

என வரும்.

வெள்.

இதுவுமது.

இ-ள் : உகப்பு  என்னுஞ்  சொல்  உயர்தலும்,  உவப்பு என்னுஞ்
சொல் உவகையும் ஆகிய குறிப்புணர்த்துவன, எ-று.

உ-ம் : ‘விசும்புகந்   தாடாது’   என  உகப்பு  உய்வுணர்த்தியது.
‘உவந்துவந்  தார்வ  நெஞ்சமொடு  ஆய்நல னளைஇ  என  உவப்பு
உவகையுணர்த்தியது.


1.பொருள்:  விண்ணில்  உயர்ந்து  பறவாமல்.

2. விரும்பி  விரும்பி  ஆர்வ  நெஞ்சமொடு ஆய்ந்த அழகைக்
கலந்துண்டு.