35

உ-ம் : 1 ‘பயவாக் களரனையர் கல்லா தவர்’ (குறள் 406)

நச்.

இதுவுமது

இ-ள் : பயப்பே    பயனாம்பயப்புப்    பயன்என்னும்    குறிப்பு
உணர்த்தும்,எ-று

உ-ம் : ‘பயவாக், களரனையர் கல்லா தவர்’ (குறள் 406)
 

வெள்.

ஆதி.

= அடுத்த சூத்திரத்துக் காண்க.

பசப்பு
 

301.

பசப்பு நிறனாகும்                              (10)

(பசப்பு நிறன் ஆகும்)
 

ஆ.மொ.இல.

‘Pasappu’ denotes colour

ஆல்.

‘Pasappu’ means colour

பி.இ.நூ.

நேமி. சொ. 56

பொன்மை நிறம் பசலை யென்ப

முத்து ஒ. 32

பயப்பே நிறம்

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது பண்பு பற்றி வந்தது.

வ-று : 2‘பசப்பித்துச் சென்றார்’ என்புழி நிறம் கூறியவாறு.


1. பொருள் : பயன் தராத களர் நிலம் போல்பவர் கல்லாதவர்.

2. பசப்பித்துச் சென்றார்-பசலை நிறத்தையுண்டாக்கிச் சென்றார்.