சேனா. (பயப்பே பயனாம், பசப்பு நிறனாகும்) இ-ள் : ‘பயவாக் களரனையர் கல்லாதவர்’ (குறள் 406) எனவும், 1‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே (கலி 7) எனவும் பயப்பும் பசப்பும், பயனும் நிற வே-றுபாடுமாகிய குறிப்பும் பண்பும் உணர்த்தும், எ-று. தெய். இ-ள் : பசப்பு என்னும் சொல் நிறத்தை உணர்த்தும், எ-று. உ-ம் : மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே (கலி. 7) நச். இது, பண்பு. இ-ள் : பசப்பு நிறன் ஆகும் - பசப்பு நிறன் என்னும் பண்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’ (கலி.7) என வரும். வெள். (பயப்பே பயனாம், பசப்பு நிறனாகும்) இ-ள் : பயப்பு என்னுஞ் சொல் பயன் என்னும் குறிப்புணர்த்தும்; பசப்பு என்னுஞ் சொல் பசலை நிறம் என்னும் பண்புணர்த்தும். உ-ம் : ‘பயவாக் களரனையர் கல்லாதவர்’ எனவும், ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’ எனவும் வரும். ஆதி உ-ம் :பயப்பு-ஈனுதல்-பயன் பசப்பு-பாசாங்கு-பசலை நிறம்
1. பொருள்: குற்றமில்லாத ஒளியுடைய முகம் பசலைநிறம் பரவும். |