ஆ.மொ.இல. ‘Iyaipu’ means joining ஆல். ‘Iyaipu’ means joining பி.இ.நூ. முத்து. ஒ. 33 ...இயைபே புணர்ச்சி யாகும்மே. இளம். இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு. வ-று :‘இயைந் தொழுகும்’ என்றக்கால், பொருந்தியொழுகும் என்பதாம். சேனா. (அடுத்த சூத்திரத்திற் காண்க) தெய். இ-ள் : இயைபு என்னுஞ் சொல் புணர்தல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : ‘இயைந் தொழுகும்’ நச். இது குறிப்பு. இ-ள் : இயைபே புணர்ச்சி-இயைபு கூட்டம் என்னும் குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : 1“வளன் வலியுறுக்கும் உளமி லாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ” (புறம் 190) என வரும்.
1. பொருள்: தம் செல்வத்தைப் பிறர்க்குதவாது வைத்திருக்கும் முயற்சியில்லாரொடு பொருந்திய நட்பு இல்லையாகுக. |