38தொல்காப்பியம் - உரைவளம்
வெள்.

ஆதி.

=(அடுத்த சூத்திரத்திற் காண்க.)

இசைப்பு
 

303.

இசைப் பிசை யாகும்                            (12)

(இசைப்பு இசை ஆகும்)
 

ஆ.மொ.இல.

‘Isaippu’ means tune

ஆல்.

‘Isaippu’ means music

பி.இ.நூ.

முத்து ஒ. 33

இசைப்பு இசை

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இஃது இசை பற்றி வந்தது.

வ-று : ‘இசைந் தொழுகும்’  என்றக்கால்,  இசையத்தோன்றிவிடும்
என்பதாம்.

சேனா.

(இயைபே புணர்ச்சி, இசைப்பு இசையாகும்)

இ-ள் : ‘இயைந்  தொழுகும்’   எனவும்,   ‘யாழிசையூப்  புக்கும்’
எனவும்,    இயைபும்  இசைப்பும்,   புணர்ச்சிக்   குறிப்பும்   இசைப்
பொருண்மையும் உணர்த்தியவாறு.

தெய்.

இ-ள் : இசைப்பு   என்னுஞ்  சொல்   இசைத்தல்   என்பதன்
பொருள்படும், எ-று.

உ-ம் : ‘யாழிசையூப் புக்கு’, ‘இசைத்தலுமுரிய’,  ‘வாயிலிசை’  என
ஒலிப் பொருட்கண் வந்தன.

நச்.

இஃது, இசை கூறுகின்றது.