இ-ள் : இசைப்பு இசையாகும்-இசைப்பு இசைப் பொருண்மையை யுணர்த்தும், எ-று. உ-ம் : ‘வாயிற் றோன்றி யாழிசையூப் புக்கு’ என வரும். வெள். (இயைபே புணர்ச்சி, இசைப்பு இசையாகும்) இ-ள் : இயைபு என்னுஞ் சொல் புணர்ச்சி என்னும் குறிப் புணர்த்தும், இசைப்பு என்னுஞ் சொல் இசைப் பொருண்மையுணர்த்தும், எ-று. உ-ம் : ‘இயைந் தொழுகும்’ எனவும், ‘யாழிசையூப் புக்கும்’ எனவும் வரும். ஆதி. உ-ம் : இயைபு-ஒப்பம், பொருத்தம்-புணர்ச்சிமுறை இசைப்பு-சேர்மானம்-இசைப்போக்கு. சிவ. ‘இசைப்பு என்பதற்குப் பொருத்தம் என்னும் பொருள் ஆகும்’ என்பது இளம்பூரணர் கருத்து. இசை என்பதைப் பொருத்தம் எனக் கொண்டார். அதனால் அவர் உதாரணமாக “இசைந்தொழுகும் என்றக்கால் இசைய (பொருந்த)த் தோன்றி விடும்” என்பதைக் காட்டினார். இசை என்பது இசை (ஓசை) என்னும் பொருள் தருவது வெளிப்படையாதலின் இளம்பூரணர் கருத்தே நன்று. அலமரல் தெருமரல் |