40தொல்காப்பியம் - உரைவளம்

பி.இ.நூ.

இல.வி. 281-4

அலமரல் தெருமரல் சுழற்சி சாற்றலும்

முத்து.ஒ. 34

அலமரல் தெருமரல் ஆகும் சுழற்சி

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் குறிப்பு.

வ-று : ‘அலமர  லாயம்’ (ஐங். 64) என்றக்கால்,  சுழன்று வால்
1ஆயம் என்பதாம்.  ‘தெருமர  லுள்ளம்’  என்பது  சுழன்று   வரும்
உள்ளம் என்பதாம்.

சேனா.

இ-ள் : ‘அலமர லாயம்’ (ஐங்.64) எனவும், ‘தெருமரலுள்ளமோடு
அன்னை  துஞ்சாள்’  எனவும், அலமரலும் தெருமரலும் சுழற்சியாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : அலமரல்   என்னும்   சொல்லும், தெருமரல் என்னும்
சொல்லும் சுழலல் என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் : அலமர   லாயம்  (ஐங்.  64),    ‘தெருமரலுள்ளமோடு
அன்னை துஞ்சாள்’.

நச்.

இது, குறிப்பு.

இ-ள் : அலமரல்  தெருமரல்  ஆயிரண்டுஞ்  சுழற்சிஅலமரல்
தெருமரல்  ஆகிய  அவ்விரண்டும்  மனத்  தடுமாற்றமாகிய  குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘அலமரல் ஆயம்’ (ஐங். 64)
          ‘தெருமரல் உள்ளமோ டன்னையுந் துஞ்சாள்’

என வரும்.

வெள்.

இ-ள் : அலமரல் தெருமரல் என்னும்  இரண்டு  உரிச்சொற்களும்
சுழற்சியாகிய குறிப்புணர்த்தும், எ-று.


1.ஆயம்-தோழியர் கூட்டம்.