41

உ-ம் : ‘அலமர  லாயம்’ எனவும், ‘தெருமர லுள்ளமொடு அன்னை
துஞ்சாள்’ எனவும் வரும்.

ஆதி.

உ-ம் : அலமரல்-திகைத்தல்-சுழல்தல்
          தெருமரல்-திண்டாட்டம்-சுழல்தல்

மழ, குழ.
 

305.

மழவுங் குழவு மிளமைப் பொருள                 (14)

(மழவும் குழவும் இளமைப் பொருள)
 

ஆ.மொ.இல.

‘Mala’ and ‘Kula’ mean youth.

ஆல்.

‘Mala’ and ‘Kula’ mean the young.

பி. இ. நூ.

இல. வி. 281-5

மழவும் குழவும் இளமைக் கேற்றலும்.

முத்து ஒ. 35

மழவும் குழவும் இளமைப் பொருள

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு.

வ-று : ‘குழக்கன்று  கடிதி  யாத்தாள்’   என்றக்கால், இளங்கன்று
கடிது யாத்தாள்   என்றதாம்.  ‘மழகளிறு’  என்றக்கால்,   இளங்கன்று
என்றவாறாம்.

சேனா.

இ-ள் : ‘மழகளிறு’ (புறம். 38) எனவும், ‘குழக்கன்று’  (நாலடி 101)
எனவும்,  மழவும்  குழவும் இளமைக் குறிப்புப் பொருள்  உணர்த்தும்,
எ-று.

தெய்.

இ-ள் : மழ  என்னுஞ்   சொல்லும்  குழ  என்னுஞ்  சொல்லும்
இளமை என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் : ‘மழகளிறு’ (புறம். 38) குழக்கன்று (நாலடி. 101)