நச். இதுவுமது. இ-ள் : மழவும் குழவும் இளமைப் பொருள் மழவும் குழவும் இளமை என்பதன் குறிப்புப் பொருண்மையையுடைய, எ-று. உ-ம் : 1 வரைபுரையும் மழகளிற்றின் மிசை (புறம். 38) ‘தடமருப் பெருமை மடநடைக் குழவி’ (நற். 120) வெள். இ-ள் : மழ என்னும் சொல்லும் குழ என்னும் சொல்லும் இளமையென்னும் குறிப்புணர்த்து, எ-று. உ-ம் : மழ களிறு, குழக்கன்று என வரும். ஆதி. |