50தொல்காப்பியம் - உரைவளம்

வெள்.

இ-ள் : அதிர்வு  விதிர்ப்பு என்னும்  உரிச்சொற்கள்  இரண்டும்
நடுக்கமாகிய குறிப்பு உணர்த்துவன, எ-று.

உ-ம் : ‘அதிர வருவதோர் நோய்’ எனவும்,  ‘விதிர்ப்புற  வறியா
ஏமக் காப்பினை’ எனவும், நடுக்கமாகிய குறிப்புணர்த்தின.

ஆதி.

உ-ம் : அதிர்வு-அதிர்ச்சி-நடுக்கம்
          விதிர்வு - கலக்கம் - நடுக்கம்.

வார்தல், போகல், ஒழுகல்.
 

311.

வார்தல் போக லொழுகன் மூன்றும்
நேர்பு நெடுமையுஞ் செய்யும் பொருள.             (20)


(வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள).
 

ஆ. மொ. இல.

‘Vārthal’  ‘Pōkal’   and  ‘Olukal’   these   three  mean   order and length.

ஆல்.

The  three  ‘Vārtal’,  ‘Pōkal’  Olukal  mean straight - forwardness and length.

பி. இ. நூ.

இல. வி. 284

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்வும் நெடுமையும் நிலவக் காட்டலும்

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது பண்பு பற்றி வந்தது.

வ-று :‘வார்கயிற்   றொழுகை’   (அகம்  172)   என்றக்கால்,
நேர்கயிற்றொழுகை   என்பதூஉ-ம்,      நெடுங்கயிற்    றொழுகை
என்பதூஉமாம்.

போகுகொடி, ஒழுகு கொடி என்புழியும் அவ்விரு பொருளும்படும்.