சொல்லதிகாரம் - இடையியல்95

ஆதி

மன்ற - தெளிவு திட்டவட்டமாகக் குறித்து நிற்கும்.
இவன் ஒரு பேதை மன்ற யாதும் அறியான் - (நிச்சயமாக) தஞ்சம்
 

தஞ்சம்
 

261.

தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே            (18)

(தஞ்சம் கிளவி எண்மைப் பொருட்டு ஏ)
 

ஆ. மொ.

இல.

The morphemes ‘thaமjam ’ means easiness.

ஆல்.

The morpheme /taņcam / specifies easiness.

பி.இ. நூ.

இல. வி. 271.

தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே

முத்து. ஒ. 13.

தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே

இளம்.

வ-று : 1 ’ஏனோரோ தஞ்சம் இருபிறப்பி னோர்க்கும்
வாழ்தல் அரிது’

சேனா.

உ-ம் : 2  ’முரசு கெழுதாயத்து  அரசோ தஞ்சம்’ (புறம். 73) எனத்
தஞ்சக்  கிளவி’  அரசு  கொடுத்தல் எளிது’  என எண்மைப் பொருள்
உணர்த்தியவாறு கண்டு கொள்க.

தெய்.

இதுவுமது

இ-ள் : தஞ்சம்         என்பது       எளிமை        என்னும்
பொருண்மையையுடைத்து, எ-று. 


1. பொருள் : இரு பிறப்பாளர்க்கும் வாழ்தல் அரிது; மற்றையாரோ
எளியர்.

2. பொருள் : முரசு முழங்க உரிமையொடு வரும் அரசும் எளிது.