சொல்லதிகாரம் - இடையியல்1

தொல்காப்பியம் - சொல்லதிகாரம்

(உரைவளம்)

இடையியல்

இளம் பூரணர்.

இவ்வோத்து  என்ன  பெயர்த்தோ வெனின் இடையியல்  என்னும்
பெயர்த்து.

சேனாவரையர்.

நிறுத்த   முறையானே   இடைச்சொல்   உணர்த்திய    எடுத்துக்
கொண்டார்,    அதனான்,    இவ்வோத்து   இடையியல்    என்னும்
பெயர்த்தாயிற்று.  மொழிக்கு  முன்னும் பின்னும் வருமாயினும்  பெரும்
பான்மையும் இடை வருதலின் இடைச் சொல்லாயிற்று.

தெய்வச் சிலையார்.

இவ்வோத்து   என்ன பெயர்த்தோவெனின், இடைச்  சொல்லோத்து
என்னும்  பெயர்த்து;  இடைச்  சொல்  உணர்த்   தினமையிற்  பெற்ற
பெயர்.   இது  பெயரையும்  வினையையும்   சார்ந்து   தோன்றுதலின்
அவற்றின் பின் கூறப்பட்டது.

நச்சினார்க்கினியர்.

நிறுத்த   முறையானே    இடைச்சொல்    உணர்த்துகின்றமையின்
இவ்வோத்து இடைச்சொல்லோத்து என்னும் பெயர்த் தாயிற்று.

கல்லாடனார்.

இவ்வோத்து   என்னை   பெயர்த்தோவெனின்,      இடைச்சொல்
இலக்கணம்    உணர்த்துதலான்    இடைச்சொல்லோத்து     என்னும்
பெயர்த்து.