த்-பொருள் என்னை? - பொருள் இல்லை கிறு-பொருள் என்னை? - பொருள் இல்லை ப்-பொருள் என்னை? - பொருள் இல்லை படித்தான்-த்-இறந்த காலம் காட்டிற்று. படிக்கிறான்-கிறு-நிகழ்காலம் காட்டிற்று. படிப்பான்-ப்-எதிர்காலம் காட்டிற்று. உம்-பொருள் யாது? ஏதோ விரைவு படுத்துதல் போல ஒரு குறிப்பு அவனும் அவளும்-இருவரும் என இணைத்துத் தெளிந்த பொருள் தருகிறது. இவ்வாறு பெயர் வினைகளிடமாகச் சேரந்து பொருள் விளக்கந் தருஞ் சொல் இடைச் சொல். 1 ஒரு குருடன்-உயிர் இருக்கிறது. கண் இருக்கிறது. கால் இருக்கிறது. ஆயினும் அவன் அடுத்தவனைச் சார்ந்தே நடக்க வேண்டியதாயுள்ளது. அவ்வாறு தமக்கு ஒரு குறிப்புப் பொருள் இருந்தும் பெயர் வினைகளோடு இடம் பெற்றே தெளிபொருள் தருஞ்சொல் இடைச்சொல். சுப்பிரமணிய சாஸ்திரியார். இடைச்சொல் என்று குறியிட்டதன் காரணம் :- சேனாவரையர் ‘மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும், பெரும்பான்மையும் இடை வருதலின் இடைச் சொல்லாயிற்று’ என்றார். நச்சினார்க்கினியரும் அவ்வாறே கூறினர். ஆனால் இடைச் சொற்களை ஆராயுமிடத்து, பெரும்பான்மையும் அவை மொழிக்கு இடையில் வருகின்றனவா என்னும் ஐயம் எழுகின்றது. இடைச்சொற்களாவன :- சாரியைகள், அன் ஆன் முதலிய வினை விகுதிகள், ஐ ஒடு கு முதலிய வேற்றுமையுருபுகள், அசை நிலைக் கிளவிகள், இசை நிறைக் கிளவிகள், தத்தம் குறிப்பாற் பொருள் செய்யும் கிளவிகள், ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் கிளவிகள் என்ற இவையேயாம்.
1. இது கண்ணில்லாதவனைக் குறித்ததன்று, தெளிவாக நடத்தற்கியலாத-துணையோடே நடத்தற்கமைந்த பார்வை குறைந்தவனைக் குறித்ததாகும். பார்வையை முழுமையாக இழந்தவனும் ஒருவன் துணையுடன் நடக்கமுடியும். அவ்வாரு பொருளேயில்லாத அசைநிலைச் சொற்களும் பெயர் வினைகளைச் சார்ந்து மொழியில் வரலாம்.-சிவ |