சொல்லதிகாரம் - இடையியல்145

உ-ம் :‘கௌஉ’ என அள பெடுத்த வழிக் ‘கைக் கொண்டே விடு’
எனத்   துணிவும்,   ‘கௌ’   என,  அள  பெடாத  வழி  ‘நினக்குக்
கருத்தாயின்  கைக்  கொள்’  என  ஐயமும் உணர்த்தும். இது ‘வௌ’
என்பதற்கும் ஒக்கும்.

இனி  ஒளகாரம்  அள பெடுத்துழி உகர ஈறாயே நிற்றலின் ‘ஒளஉ’
என   உகரவீறாகிய   ஒளகாரமும்  ஈண்டுக்  கோடும். இது  வியப்பு
உணர்த்தும் அளபெடா ஒளகாரம் ஆகாது என்று உணர்க.

ஆதி.

பொருள் : இரண்டு  மாத்திரை கொண்டு மொழிக்கு ஈற்றில் வாராத
உயிரெழுத்தாகிய  ஒள,  இறுதியில்  வந்துற்ற  இடத்தும், அளபெடுத்து
நீண்ட  இடத்தும், அளபெடை யின்றி நிற்கும்  இடத்திலும் வேறுபட்ட
பொருள்    தருவதாகும்.    அது   குறிப்பால்   இசை   முறையால்
தோன்றுவதாகும்.

ஈற்றில் வாராத ஒள ஈற்றில்  வரும்  இடம் என்பது க், வ் சேர்ந்து
கௌ, வௌ என வருவதாம்.

அளபெடை நிலைத்தல்- கௌஉ, வௌஉ
அளபெடை இன்றி வந்தன - கௌ, வௌ - இவை
குறிப்பாக அசைமொழியாதல்.
வௌ வௌ என நாய் குரைத்தது - ஒலிக் குறிப்பு.

கௌஉ கௌஉ எனக்  கௌவிக்  கொண்டது  -  நன்றாக  எனப்
பொருள் தரு இசைக் குறிப்பு.

சுப்.

பொருள் : இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒள என்னும்
இடைச்   சொல்   மூன்று   வகையாற்   பொருள்   படும்  என்பது
உணர்த்துதல்  நுதலிற்று.  வரலாறு:  - ஆயியல் நிலையும் காலத்தால்
வருதலாவது   மேற்   கூறிய   மூன்றும்   போல்   வருதல்:  ஒன்று
உரைக்குங்கால்  இரட்டித்து ‘ஒளஒள என வரும். அளபெடைநிலையுங்
காலத்தால் வந்து அது பொருள் படுமாறு: ஒளஉ எனவரும். யாதானும்
ஒரு  துன்புறவின்  கண்  அளபெடை  யின்றித் தான் வருமாறு: ‘ஒள’
என  ஒரு  குறிப்புப்  பொருட்கண்  வருவது என்றவாறு. இம் மூன்று
பொருட் பகுதியும் குறிப்பினான் வேறு படுத்து அறிந்து கொள்க.