இலக்கண விளக்கம் 251. ................................ பெயரினும் வினையினும்..... ஒன்றும் பலவும்வந்து ஒன்றுவது இடைச்சொல் தொன்னூல் விளக்கம். 130 இடைச்சொல் தனிநிலையின்றி... வினைபெயர் சேர்ந்து... எண்கூற்றவை என்ப. முத்துவீரியம் ஒழிபியல். ?. பெயர்வினை யிடத்துப் பிறப்பது இடைச்சொல். இளம்பூரணர். என்பது சூத்திரம். 1 இச்சூத்திரம் இடைச்சொற்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 2அதுமன் (புறம் 147) என்பது பெயரொடு நடை பெற்றது. ‘தமக்கியல்பிலவே’ என்றதனான், இடைச் சொற்கள் 3பகவின்றியே நின்றிசைப்பனவும் உள என்றவாறு.
1. இச்சூத்திரத்திற்கு உரை காணப்படவில்லை. பின்னரும் பல சூத்திரங்களுக்கு உரையில்லை. வரலாறு தொடங்கிய சிறப்புரைகள் காணப்படுகின்றன. 2. மன் என்னும் இடைச்சொல் அது என்னும் சுட்டுப் பெயரொடு வந்துளது. வினையொடு இடைச்சொல் வந்ததற்கு உதாரணம் காட்டப்படவில்லை. ‘வருகதில் அம்ம’ (அகம் 276) என்பதில் தில் என்னும் இடைச்சொல் வருக என்னும் வினைச் சொல்லுடன் வந்துள்ளது. 3. பகவின்றி-பிரிக்கப்படுதலின்றி; உண்டான் என்பதில் இறந்தகால இடைநிலை டகர ஒற்றும் விகுதி ஆன் என்பதும் இடைச் சொற்கள். இவை உண் என்பதுடன் சேர்ந்து பிரிக்கப்படாமல் ஒரே சொல்லாய் வந்தது காண்க அதுமன், வருகதில் என்பனவற்றில் மன், தில் என்பன அது, வருக என்பனவற்றிற்குப் புறமாக நிற்றல் காண்க. |