சொல்லதிகாரம் - இடையியல்8

வரலாறு : - உண்டான் என்னுந் தொடக்கத்தன.

சேனாவரையர்.

இதன் பொருள் :   இடைச்சொல்    என்று     சொல்லப்படுவன
பெயரொடும்  வினையொடும்  வழக்குப் பெற்றியலும்;  தாமாக நடக்கும்
இயல்பு இல என்றவாறு.

1”இடைச்சொற்   கிளவியும்  உரிச்சொற்  கிளவியும், அவற்று வழி
மருங்கிற்றோன்றும்”   (பெயரியல்  5)   என்றதனான்  இடைச்  சொல்
பெயரும்    வினையும்     சார்ந்து    வருதல்   பெறப்பட்டமையான்
‘பெயரொடும் வினையொடும்  நடைபெற்றியலும் தமக்கியல்பில்’ என்றது,
ஈண்டுப் பெயரும்  வினையும்  உணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று
அவற்றை  வெளிப்படுப்பதல்லது   தமக்கெனப்  பொருளுடையனவல்ல
என்றவாறாம்.

உதாரணம் :  ‘அது கொல் தோழி காமநோயே’ (குறுந். 5) எனவும்,
‘வருகதில்லம்மவெஞ்   சேரிசேர’    (அகம்  276)  எனவும்  பெயரும்
வினையும் சார்ந்து அப்பொருளை வெளிப்படுத்தவாறு கண்டு கொள்க.

சார்ந்து   வருதல்  உரிச்சொற்கும்    ஒத்தலின்,    தமக்கெனப்
பொருளின்மை இடைச் சொற்குச்சிறப்பிலக்கணமாம்,

‘தமக்கியல்பிலவே      என்றது     சார்ந்தல்லது     வாராவென
வலியுறுத்தவாறு.   ‘பெயரொடும்   வினையொடும்    நடைபெற்றியலும்
தமக்கியல்பில்   எனப்   பொதுப்படக்   கூறியவதனால்  3சாரப்படும்
சொல்லின் வேறாய் வருதலேயன்றி உண்டனன்


1. ‘பெயரியலில்      இடைச்    சொல்  (உரிச்சொல்லும்)  பெயர்
வினைகளைச் சார்ந்து  வரும் என்பது   கூறப்பட்டது.   ஈண்டு
இடைச்சொல்   பெயர்ப்  பொருளையும் வினைப் பொருளையும்
சார்ந்து   வரும்   என்பது கூறப்பட்டது. என்பது இப்பகுதியின்
விளக்கம்.

2. உரிச்சொற்கள்  தமக்கெனப்  பொருளுடையன,  உறு  என்னும்
உரிச்சொல்  ‘உறுபொருள்’  என்ற   விடத்து   மிகுதி என்னும்
பொருள் தருதல் காண்க.

3. சாரப்படும்   சொல்லின்  வேறாய்  வருதல்-அதுமன், வருகதில்
என்பன    போலச்சொல்லின்  புறமாக   வருதல்,   சாரப்படும்
சொல்லிற்கு    உறுப்பாய்    வருதல்,  இடை  நிலை, சாரியை,
விகுதிகளாகச் சொல்லின் அகத்தே வருதல்.