சொல்லதிகாரம் - இடையியல்22

1 இடைச்சொல்  ஏழனுள்ளும்   முதல்   நின்ற  மூன்றும்   மேலே
யுணர்த்தப்பட்டமையான்  முன்   வைத்தார். ஒப்பில் வழியாற் பொருள்
செய்குக  முன்னர் உணர்த்தப்படுதலின் இறுதிக்கண் வைத்தார்,  ஒழிந்த
மூன்றும் இவ்வோத்தின் கண் உணர்த்தப் படுதலின் இடைவைத்தார்.

தெய்.

இ-ள் ;  ‘அவைதாம்  புணரியல்  நிலையிடைப்  பொருள்  நிலைக்
குதநவும்’  என்பது, மேற் சொல்லப்பட்ட  இடைச்  சொற்கள் தாம் ஒரு
சொல்லோடு   ஒரு சொல் புணர்த்தியலும் வழி, அப்பொருள் நிலைக்கு
உதவியாகி வருவனவும் என்றவாறு.

2 பொருள் நிலைக்கு  உதவலாவது  அல்வழிப்  பொருட்கு உரியன
இவை    வேற்றுமைப்   பொருட்கு   உரிய   இவையென   வருதல்.
அவையாவன ‘இன்னேவற்றே’(புண 17) என்பன முதலாயின.

அவை சாரியையன்றோவெனின்  அவை இடைச்சொல் எனவும் ஒரு
குறி பெறும் என்றவாறு.

‘வினை  செயல் மருங்கிற்  காலமொடு வருநவும்’ என்றது  வினைச்
சொன்முடிவு  பெறு  மிடத்துக்  காலங்  காட்டும்  சொல்லோடு   பால்
காட்டும் சொல்லும் என்றவாறு. அவையாவன;


1. இடைச்சொல் ஏழு;   சாரியை,   விகுதி,   வேற்றுமை   யுருபு,
அசைநிலை,   இசைநிறை,  குறிப்பிற்  பொருள் செய்வன, உவம
உருபு    என்பன.   சாரியை  எழுத்ததி  காரத்துப்  புணரியல்
முதலியவற்றில்      கூறப்பட்டது,    விகுதி     வினையியலிற்
கூறப்பட்டது. வேற்றுமையியலில் வேற்றுமையுருபு   கூறப்பட்டது.
அசைநிலை,  இசைநிறை,  தத்தம் குறிப்பிற்  பொருள்  செய்குக
இவ்வியலிற்  கூறப்பட்டன.  உவம உருபு பின்னர் உவமவியலிற்
கூறப்பட்டது.

2. பொருள் என்றதை   உயர்திணை   அஃறிணைப்  பொருள்கள்
எனக் கொண்டனர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும்,