சொல்லதிகாரம் - இடையியல்24

அவற்றுள்   ‘புணரியல்    நிலையிடைப்    பொருள்    நிலைக்கு
உதவுந’எழுத்ததிகாரத்துக்   கூறப்பட்டன  (குற்றிய.)  ‘வினை   செயல்
மருங்கிற்  காலமொடு வருந வினையியலுட் கூறப்பட்டன.  வேற்றுமைப்
பொருள்வயின்   உருபாகுந  வேற்றுமை  யோத்தினுட்   கூறப்பட்டன.
ஏனை நான்கும் ஈண்டு ஓதப்படுகின்றன.

நச்.

இஃது அவ்விடைச் சொற்களின் பாகுபாடு கூறுகின்றது.

இ-ள் ;  அவைதாம் - முற்கூறிய இடைச் சொற்கள் தாம், புணரியல்
நிலையிடைப்    பொருள்நிலைக்  குதநவும்  -  இரு  மொழி  தம்மில்
புணர்தல்   இயன்ற  நிலைமைக்கண்  அவற்றின்  பொருள்  நிலைக்கு
உதவிசெய்து    வருவனவும்,   வினைசெயல்   மருங்கின்  காலமொடு
வருநவும்  -   முதல்  நிலை  நின்று  காரியத்தினைத் தோற்றுவிக்கும்
இடத்துக்   காலங்காட்டும்  இடைச்  சொற்களோடே  பாலும்  இடமும்
காட்டும்  இடைச்சொற்களாய்  வருவனவும், வேற்றுமைப் பொருள்வயின்
உருபு    ஆகுநவும் -   வேறுபடச்   செயும்   செயப்படு   பொருள்
முதலாயவற்றின்கண்   உருபு   என்னும் குறியவாய் வருவனவும், அசை
நிலைக்  கிளவி  ஆகி வருநவும்-தமக்கோர் பொருளின்றித் தாஞ்சார்ந்த
பெயர்வினைகளை   அசையப்  பண்ணும் நிலைமையவாய் வருவனவும்,
இசை   நிறைக்கிளவி    ஆகி   வருவனவும்  -  செய்யுட்கண்  இசை
நிறைத்தலே    பொருளாக   வருவனவும்,  தத்தங்குறிப்பிற்  பொருள்
செய்குநவும்-  கூறுவார்  தத்தங்  குறித்த குறிப்பினாலே அவர் குறித்த
பொருளை   விளக்கி    நிற்பனவும்,   ஒப்பு  இல்வழியால்  பொருள்
செய்குநவும்-   நாடக    வழக்கினான்   உய்த்துணரினன்றி  உலகியல்
வழக்கினாற்    காட்டப்படுவதோர்    ஒப்பின்றி   நின்ற   ஒப்புமைப்
பொருண்மையை    உணர்த்தி    வரும்   உவமவுருபுகளும்,   என்று
அப்பண்பினவே நுவலுங்காலை - என்று  சொல்லப்பட்ட அவ்வேழியல்
பினையுடைய சொல்லுமிடத்து, எ-று.

பொருள்  நிலைக்குதவுவன,  எல்லாம் என்பதனை வற்றுச் சாரியை
அஃறிணையாக்கியும்,   நம்முச்சாரியை  உயர்திணை யாக்கியும் நிற்பன
போல்வன.  இதனானே   காரம்,  கரம்  முதலிய எழுத்துச்சாரியையும்
கொள்க.

உ-ம் ;   ‘உண்டான்’   என்புழி   ‘உண்’   என்னும்  முதல்நிலை
காலங்காட்டுகின்ற    டகரத்தினையும்,   பாலும்   இடமும்   காட்டும்
ஆனினையும் விரித்து நின்றவாறு காண்க.