உண்டு என்னும் எச்சம் முதலியனவும் பாலும் இடமும் உணர்த்தும் என்பது, வந்தான், வந்தது என்னும் வினைகளாற் பெறுதல் ‘பிரிவு வேறுபடுஉஞ் செய்தியவாகி’ (வினை 25) என்பதனாற் கொள்க. தன்னின முடித்தல் என்பதனால் உண்டவன் என்றாற் போலும் தொழிற்பெயரும், நம்பி, நங்கை என்னும் பெயர்ப் பெயரும் இவ்விடைச் சொற் பெற்று வருதல் கொள்க. ‘கண்ணகன் ஞாலம்’ என்புழிக் ‘கண்’ இடப்பொருள் உணர்த்துதலும், ‘ஊர்க்கால்’ என்புழிக் ‘கால்’ உருபாகலும் முற்கூறினாம். (வேற். 21 உரை) ‘அனையை யாகன்மாறே’ (புறம். 4) என்புழி ‘மாறு’ என்னும் இடைச்சொல் வினையையடுத்துக் காரணப்பொருள் உணர்த்தி நிற்றலின் மூன்றாம் வேற்றுமைப் பொருள் உணர்த்தி நின்றதல்லாமை காண்க. அது மூன்றாவதன் பொருள் உணர்த்திற்றேல், ‘கூறாய் தோழியாம் வாழுமாறே’ என்புழி வாழுமாற்றையென இரண்டாவது விரியாதாம். ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ’ (திருமுருகு. 95) என்புழி முறைமையின் வழுவாத அந்தணர் என ஐந்தாவது விரிதலானும், இயல்புளிக் கோலோச்சு மன்னவன்’ (குறள் 545) என்புழி ‘முறைமையிலே செங்கோல் நடாத்தும்’ என ஏழன் உருபு விரிதலானும் ‘உளி’ என்பது மூன்றன் உருபின் பொருள் பட வந்ததன்று; பகுதிப் பொருள் விகுதியாய் நின்று, தனக்கேற்ற உருபையேற்று நின்றது. இம்மூன்றும் புணரியலுள்ளும் வினையியலுள்ளும் வேற்றுமையோத்தினுள்ளும் கூறி, இடை நின்ற மூன்றும் ஈண்டுக் கூறுகின்றார். இறுதி நின்ற ‘ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் உவம உருபுகள், ‘அன்ன ஏய்ப்ப’என்னும் சூத்திரத்தான் உவம இயலுட் கூறுப. அவை ஒப்பின்றி ஒப்புணர்த்துதல் ‘ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா’ (பொருளியல் 52) என்னும் பொருளியற் சூத்திரத்தான் உணர்க. கல். என்-எனின், அவ்விடைச் சொற்களின் பாகுபாடாமாறு உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் ; மேல் இடைச்சொல் என்று சொல்லப்பட்டவைதாம், இருமொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைமைக்கண் அவற்றின் பொருள் நிலைமைக்கு உதவி செய்து வருவனவும், வினைச்சொற்களை முடிக்குமிடத்துக் காலங்காட்டும் இடைச்சொற்களோடு கூடித் தாம் பால்காட்டும் சொற்களாய் வருவனவும் |