வேறுபாடு செய்த பொருண்மையிடத்து வேற்றுமையுருபாய் வருவனவும், வழக்கின்கண் தமக்கு ஓர் பொருளின்றித் தாம் அடைந்த பெயர் வினைகளை அசையப்பண்ணி நிற்கும் நிலைமையவாய் வருவனவும், பெயர்ப் பொருளிடத்துப் பொருளின்றி ஓரோர் அசையை நிறைத்தற்பொருண்மையவாய் வருவனவும், பெயர் வினைகள்போல விளங்கப் பொருளுணர்த்தாத சொற்கள் தத்தம் குறிப்பானே. ஒரு பொருளையுணர்த்தி வருவனவும், ஒத்த என்னும் வாய்பாடு தண்கண் நில்லாத கூற்றானே நின்ற ஒப்புமைப் பொருண்மையை உணர்த்தி வருவனவும் என்று சொல்லப்பட்ட அவ்விலக்கணங்களை உடையனவாம் அவற்றைச் சொல்லுங்காலத்து, எ-று. புணர்ச்சிக்கண் வருவன எழுத்தோத்தினுள் ‘இன்னே வற்றே’ (புணரி). என்னும் சூத்திரத்தான் ஓதப்பட்டன. இனித்தன்னின முடித்தல் என்பதனான் காரம், கரம், கான் என்னும் எழுத்துச்சாரியையும் கொள்ளப்படும். வினைச் சொற்கள் பால்காட்டி வருவன வினையியலுள் “அம் ஆம்” முதலாக ஈறு பற்றி ஓதினவெல்லாம் எனக் கொள்க. இனி, அவ்வினைச் சொற்கள் ‘காலமொடு வருநவும்’ என்றதனால் காலங்காட்டி வருவன ‘உண்டான்’ என்புழி இடைக்கண் டகரமும், ‘உண்ணா நின்றான்’ என்புழி ஆநின்றும், ‘உண்பான்’ என்புழிப் பகரமும் அத்தன்மைய பிறவும் எனக்கொள்க. காலம் உணர்த்த வருதலான் அவை காலம் எனப்பட்டன. உண்டான் என்புழிக் காலம் காட்டும் டகரத்துடனே பால் காட்டும் ‘ஆன்’ வந்தவாறு அறிக. இவ்வாறு பாலும் காலமும் காட்டுவன வினைக்கு என்று ஓதினும் அதனைப் பெரும்பான்மையாக்கி ‘உண்டவன்’ என்றாற்போலப் 1 பெயர்க்கும் கொள்க. இனி ஒன்றெனமுடித்தல் என்பதனால் வினைச் சொற்கண் பாலுணர்த்துவனவே யன்றிப் பெயர்க்கேயுரிய வாய்பாட்டால் உணர்த்துவனவும் கொள்ளப்படும், அவை நம்பி, நங்கை என்னும் இகர ஐகார ஈறுபோல்வன எனக் கொள்க. வேற்றுமை யுருபாய் வருவன வேற்றுமையோத்தினுள் ‘அவைதாம் பெயர் ஐ ஒடு கு’ (வேற்.) என்னும் சூத்திரத்துப் பெயர் ஒழிந்த ஏழும் எனக் கொள்க இவற்றை ஒத்து அடைவு
1. பெயர் - வினையாலணையும் பெயர். |