சொல்லதிகாரம் - இடையியல்39

1 ‘அவைதாம்’     எனப்    பொதுவகையான்      ஓதினாரேனும்
இவ்விலக்கணம்   இவ்வோத்தின்கண்  உணர்த்தப்படும்  அசை  நிலை
முதலாகிய மூன்றற்கும் எனக் கொள்க.

(‘அன்னவை  யெல்லாம்’ என்றதனான் ‘மன்னைச் சொல்’ (இடை. 4)
‘கொன்னைச்  சொல்’  (இடை.5) எனத் தம்மை யுணர நின்ற  வழி ஈறு
திரிதலும்,  ‘னகாரை  முன்னர்’  (மொழி  மரபு.  19)  என   எழுத்துச்
சாரியை ஈறு திரிதலும் கொள்க.)

தெய்.

இதுவும் இடைச் சொற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : மேற்சொல்லப்பட்ட இடைச்சொல்தாம் மொழியை  முன்னும்
பின்னும் அடுத்து வருதலும், தத்தம் ஈறு திரிந்து  வருதலும்,  பிறிதோர்
இடைச்  சொல்  ஆண்டு அடுத்து வருதலும்,  ஆகிய  அத்தன்மையை
எல்லாம் உரிய, எ-று.

உ-ம் :  அதுமன்,   கேண்மியா   என்பன   மொழிமுன்  வந்தன.
கொன்னூர்,   ஓஒ   கொடியை   என்பன   மொழிப்  பின்   வந்தன.
‘மனைச்சொல்’  என்றவழி  ஈறு  திரிந்தது.  ‘வருகதில்லம்ம’   என்பது
பிறிது அவண் நின்றது. பிறவும் அன்ன.

நச்.

இஃது இன்னும் அவற்றுக்கோர் பொதுவிதி கூறுகின்றது.

இ-ள் :  அவைதாம்  -  முற்கூறிய  இடைச்சொற்கள்  தாம் இடை
வருதலேயன்றி,   மொழி  முன்னும்  பின்னும்   அடுத்து   வருதலும்-
தம்மாற்  சாரப்படுஞ்  சொற்களை முன்னும்  பின்னும் தாம்  அடைந்து
வருதலும், தம் ஈறு திரிதலும்- தம் ஈற்றெழுத்து  வேறுபட்டு  வருதலும்,
பிறிது  அவண்  நிலையலும்  -  ஓர்  இடைச்சொல்  நிற்கின்றவிடத்தே
மற்றோர்  இடைச்  சொல்  நிற்றலுமாகிய, அன்னவையெல்லாம்   உரிய
என்ப    -    அத்தன்மையையுடைய     இலக்கணங்கள்    எல்லாம்
இடைச்சொற்கு உரிய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று.

உ-ம் : அதுமன், கேண்மியா - இவை முன் அடுத்தன.  ‘கொன்னூர்
துஞ்சினும்’   (குறுந்.  138)  ‘ஓஒ  இனிதே’  -  இவை பின் அடுத்தன.
உடனுயிர்  போகுகதில்ல’ (குறுந். 57) - இது திருந்தது. ‘வருகதில் லம்ம
வெஞ் சேரி சேர’ (அகம் 216)


1. அவைதாம்  என்பது   முன்    சூத்திரத்துள்ள    ஏழினையும்
உணர்த்தலின்  இவ்வாறு எழுதினார்.