[பெயரியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்99

99

செய்யும் என்னும் முற்றுச் சொல்லானும் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்து: அப்பால் தெரிய வரும் தொழிலின் கண் எ - று.

நிகழூஉ நின்ற என்பதனைப் பெயரெச்சமாகவும், பலர் வரை கிளவி என்பதனை வினைத்தொகை யாகவுங் கொள்க. உம்மை எச்சவும்மை யாகலான், அஃறிணை யொருமை தோன்றலும் உரித்தென்று கொள்க.

எ - டு. சாத்தன் யாழெழூஉம், சாத்தி சாந்தரைக்கும் என்றவழி உயர்திணை என்பது பெறப்பட்டது. சாத்தன் புல்மேயும், சாத்தி புல் மேயும் என்றவழி அஃறிணை என்பது பெறப்பட்டது.

(19)

விரவுப் பெயர்க்குப் பெயரும் முறையும் தொகையும்

170.இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லாம் 1நீரே நீயெனக் கிளந்து
சொல்லிய அன்ன பிறவு மாஅங்கு
அன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே.

 மேற்சொல்லப்பட்ட இருதிணைக்கு முரிய சொல் பாகுபடுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இயற் பெயர் முதலாக எடுத்து ஓதப்பட்டனவும் எடுத்து ஓதப்படாத அத்தன்மைய பிறவும் இருதிணைப் பொருண்மையும் உணரத் தோன்றின், அவ்விருதிணையோடுங் கொள்க, எ - று. ஒரு திணைமேற் கொள்ளற்க என்றவாறாயிற்று.

இயற் பெயராவது ஒரு பொருட்கு இடுகுறியாகி வழங்கும் பெயர். மேற் சினைப் பெயர் கூறுகின்றா ராதலின் இதனை முதற் பெயர் என்று. கொள்க.

சினைப் பெயராவது உறுப்பின் பெயர்.

சினைமுதற் பெயராவது சினையையும் முதலையும் உணர்த்தும் பெயர்.

முறைப் பெயராவது பிறப்பு முறை பற்றி வரும் பெயர்.

தாம், எல்லாம், நீர் என்பன பன்மை உணர்த்தும் பெயர்.

தான், நீ என்பன ஒருமை யுணர்த்தும் பெயர்.

அன்ன பிறவும் ஆவன பிராயம் பற்றி வரும் பெயரும், இடம் பற்றி வரும் பெயரும், தொழில் பற்றி வரும் பெயரும் பிறவும்.

(20)

விரவுப் பெயரின் பாகுபாடு

171.அவற்றுள்,
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்.

1. நீயிர் என்பது பிறவுரையாசிரியர்கள் கொண்ட பாடம்.