100தொல்காப்பியம்[பெயரியல்]

100
நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே
ஏனைப் பெயரே தத்தம் மரபின.

மேற் சொல்லப்பட்ட பெயர் விரிவகையான் உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் இயற் பெயர் நான்கு வகைப்படும், சினைப் பெயர் நான்கு வகைப்படும், சினை முதற் பெயர் நான்கு வகைப்படும், முறைப் பெயர் இரண்டு வகைப்படும், ஏனைப் பெயர் ஓதிய வாய்பாட்டன, எ - று.

(21)

இயற் பெயர் நான்கு

172.அவைதாம்,
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பன்மை இயற்பெயர் ஒருமைஇயற் பெயரென்
றந்நான் கென்ப இயற்பெயர் நிலையே.

 நிறுத்த முறையானே இயற்பெயர் நான்கும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட இயற் பெயரது நிலைமையாவது இருதிணைக்கண்ணும் பெண்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஆண்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், பன்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஒருமைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும் என அந் நான்கும், எ - று.

பன்மை இயற் பெயர் என்றாராயினும் உயர்திணைப் பன்மை இயற்பெயர் பால் தோன்றலின், அஃதொழித்து ஏனையது கொள்ளப்படும். அவ்வாறாதல் வருகின்ற சூத்திரங்களானும் விளங்கும். இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும்.

எ - டு. பெண்மை குறித்த பெயர் சாத்தி. ஆண்மை குறித்த. பெயர் சாத்தன். ஒருமை குறித்த பெயர் கோதை. பன்மை குறித்த பெயர் யானை. பிறவும் அன்ன.

(22)

சினைப் பெயர் நான்கு

173.பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயரென்
றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே.

சினைப் பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட சினைப் பெயரது நிலைமையாவது பெண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர்,