[பெயரியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்101

101

ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், பன்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், ஒருைமைப்மல் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் என அந்நான்கும், எ - று.

எ - டு . முலை என்பது பெண்மை குறித்து நின்றது. மோவாய் என்பது ஆண்மை குறித்து நின்றது. கை என்பது ஒருமை குறித்து நின்றது. தலை என்பது பன்மை குறித்து நின்றது.

(23)

சினை முதற் பெயர் நான்கு

174.பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே
பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே
ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்று
அந்நான் கென்ப சினைமுதற் பெயரே.

 சினைமுதற் பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பெண்மை சுட்டிய சினை முதற் பெயர் முதலாகிய நான்கும் சினை முதற் பெயராவன, எ - று.

ஈண்டுச் சினை முதற் பெயர் என்றமையான் முதலைக் குறித்த பெயரும் சினையைக்
குறித்த பெயரும் அன்றி, முதலையும் சினையையும் குறித்த பெயர் என்று கொள்ளப்படும்.

எ - டு . முடத்தி என்பது பெண்மையைக் குறித்தது. முடவன் என்பது ஆண்மையைக் குறித்தது. செவியிலி என்பது ஒருமையைக் குறித்தது. தூங்கல் என்பது பன்மை குறித்தது.

(24)

முறைப் பெயர் இரண்டு

175.பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென்
றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே.

 முறைப் பெயர் இரண்டும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும், ஆண்மைப்
பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும் என முறைப் பெயர் இரண்டாவன, எ - று.

எ - டு. தாய் என்பது பெண்மை குறித்தது. தந்தை என்பது ஆண்மை குறித்தது. பிறவுமன்ன.

(25)

பெண்மை சுட்டிய பெயர்

176.பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே.