பதவியல்

வடமொழியாக்கம்
தமிழ் எழுத்தில் சிறப்பெழுத்தும் பொதுவெழுத்தும்

150றனழ எ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள
பல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே.
 
ற ன ழ எ ஒவ்வும் - முதலும் சார்புமாகிய தமிழ் எழுத்து நாற்பதுகளிலே றகர னகர ழகர எகர ஒகரங்கள் ஐந்தும் , உயிர்மெய்யும் உயிரளபு அல்லாச் சார்பும் - உயிர்மெய்யும் உயிரளபெடையும் அல்லாத சார்பெழுத்து எட்டும் , தமிழ் - தமிழுக்கே சிறப்பெழுத்துக்களாம் , பிற பொது - ஒழிந்த இருபத்தேழு எழுத்துக்களும் பொது எழுத்துக்களாம் .

பதவியல் முற்றிற்று.