72

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     என ஈகாரவீற்று இடைப்பதமுன்மிக்கன. தீக்கதி, (தீ) + (சிறை, தொழில், புலன்)
என ஈகார ஈற்று உரிப்பதமுன் மிக்கன.

     கடுக்குறிது, (கடு) + (சிறிது, தீது, பெரிது) எ - ம்; (காய், 2 செதிள், தோல், பூ) எ
- ம், உகரவீற்றுப்பெயர்ப்பதமுன் இருவழியும் மிக்கன. (அடித்து, பிடித்து) +
(கொண்டான், சென்றான், தந்தான், போயினான்) என உகரவீற்று வினைப்பதமுன்
மிக்கன. (மற்று) + (கொள், செல், தா, போ) என உகரவீற்று இடைப்பதமுன்மிக்கன.
(அதிர்ப்பு) + (கடிது, சிறிது, தீது, பெரிது) என உகரவீற்று உரிப்பதமுன் மிக்கன.
(*ஊர்க்கு) + (கொண்டான், சென்றான், தந்தான், போயினான்) என உகரவீற்று
உருபுப்பதமுன் மிக்கன.

     கொண்மூக்கடிது; (கொண்மூ) + (சிறிது, தீது, பெரிது) எ - ம், (கடுமை, சிறுமை,
தீமை, பெருமை) எ - ம் ஊகாரவீற்றுப் பெயர்ப்பதமுன் இருவழியும் மிக்கன.
உண்ணூக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என ஊகாரவீற்று
வினைப்பதமுன் மிக்கன.

     சேக்கடிது; (சே) + (சிறிது, தீது, பெரிது) எ - ம், (கடுமை, சிறுமை, தீமை,
பெருமை) எ - ம் ஏகாரவீற்றுப் பெயர்ப்பதமுன் இருவழியும் மிக்கன.

     யானைக்கோடு; (யானை) + (செவி, தலை, புறம்) என ஐகார வீற்றுப் பெயர்முன்
வேற்றுமைக்கண் மிக்கன. ஒல்லைக்கொண்டான், வல்லைக்கொண்டான்; (ஒல்லை,
வல்லை) + (சென்றான், தந்தான், போயினான்) என வினையெச்சவினைச்சொன்முன்
மிக்கன. “தில்லைச் சொல்” (தொல். இடை. 5), “கொன்னைச்சொல்” (தொல். இடை. 6)
என இடைச்சொன் முன் மிக்கது. பணைத்தோளென உரிப்பதமுன் மிக்கது.
யானையைக்காத்தான்; சேர்த்தான், தடுத்தான், பிடித்தான் என உருபுப்பதமுன் மிக்கன.

     நொக்கொற்றா; சாத்தா, தேவா, பூதா என ஒகரவீற்றுவினைப்பதமுன் மிக்கன.

     கோக்கடிது; (கோ) + (சிறிது, தீது, பெரிது) எ - ம், (கடுமை, சிறுமை, தீமை,
பெருமை) எ - ம் ஓகாரவீற்றுப்பெயர்ப்பதமுன் இருவழியும் மிக்கன.

     ஒளக்கடிது; (ஒள) + (சிறிது, தீது, பெரிது) எ - ம், (கடுமை, சிறுமை, தீமை,
பெருமை எ - ம் ஒளகாரவீற்றுப் பெயர்ப்பதமுன் இருவழியும் மிக்கன.

     கொக்குக்கடிது; (கொக்கு) + (சிறிது, தீது, பெரிது) எ - ம், (கடுமை, சிறுமை, தீமை,
பெருமை) எ - ம் குற்றுகரவீற்றுப் பெயர்ப்பதமுன் இரு வழியும் மிக்கன. ஈண்டுக்
காட்டாதொழிந்தனவும் வந்தவழிக் கண்டு இதுவே நிலனாக முடித்துக்கொள்க.

     இதனுள், ‘மன்னே’ என்றமிகையானே, விதவாதவற்றுள்ளும் சிறுபான்மை
மிகாதனவும் உளவெனக்கொள்க. அவை; குணகடல்,
     * ஊர்க்குக்கொண்டான்.....போயினானென இயைக்க.