2.- உயிரீற்றுப்புணரியல்

73

   
     குடகடல், வடகடல், வடகலை, மழகளிறு, குழவிகை, ஏரிகரை, மீகண்,
“மலைகிழவோனே” (முருகு. 317), குழந்தைகை, ‘என்னைகாணுமாறு’
என்றற்றொடக்கத்தன. பிறவும் வருவனவெல்லாம் இதுவே விதியாக முடிக்க.

     (பி - ம்.) 1விரித்தல் 2துள்

(15)

 

(165)

மரப்பெயர் முன்ன ரினமெல் லெழுத்து
வரப்பெறு நவுமுள வேற்றுமை வழியே.

     எ - ன், உயிரீற்றுமரப்பெயர்கட்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) உயிரீற்றுமரப் பெயர்களின் முன்மேலைப்பொது விதியால் இருவழியும்
வல்லெழுத்துமிகுதலேயன்றி வரும் வல்லெழுத்துக்கு இனமான மெல்லெழுத்து
1மிகப்பெறுவனவும் சிலவுள, வேற்றுமைக்கண் எ - று.

     வ - று. விளங்கோடு, களங்கனி, 2*யாங்கோடு, 3*உதிங்கோடு, (சேங்கோடு; (விள,
கள, யா, உதி, சே) + (4செதிள், தோல், பூ) எனவரும், விளக்கோடு, யாக்கோடு;
விளக்குறிது, யாக்குறிது என இருவழியும் வல்லெழுத்துப்பேறும் கொள்க.

     ‘பெறுநவும்’ என்ற உம்மையால், அத்திக்காய், அகத்திக்காய், 5ஆத்திக்காய்,
(இறலிக்காய், இலந்தைக்காய் முதலாயின மெல்லெழுத்துப் *பெறாவெனக்கொள்க.

     (பி - ம்.) 1மிகவும்பெறுவன 2மாங்கோடு 3ஒதிங்கோடு 4செதுள் 5ஆரத்திக்காய்
6(1) பெறாவனவாமென்க (2) பெறாவுமாமென்க.

(16)

 

(166)

செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரி னெச்சமுற் றாற னுருபே
அஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே.

     எ - ன், எய்தியது விலக்குதல்நுதலிற்று.

     (இ - ள்.) இச்சொன்ன ஆறிடத்தும் அகரமுன் வல்லினம்வந்தால்
இயல்பாய்முடியும் எ - று.

     இதன் முதலீறுகளில் அகரவீற்றுமொழிகளை வைத்தமையால் இடையனவும்
அகரவீறேயாமெனக்கொள்க. ‘பல்வகைப் பெயரினெச்சம்’ என்றது, தொழிலும் ஒப்பும்
பண்புமுதலானவும் எதிர்மறையில் வருவனவும் எல்லாம் தழுவுதற்கெனக்கொள்க.

     வ - று. உண்ணியகொண்டான்; (உண்ணிய) + (சென்றான், தந்தான், போயினான்)
என வினையெச்சமுன் இயல்பாயின. (உண்ட, உண்ணா நின்ற) + (குதிரை, செந்நாய்,
தகர், பன்றி) எனத் தொழில் கொள்பெய
     * யா, உதி, சே என்பன மரவிசேடங்கள்; (தொல். எழுத்.)
     ( இறலி - இரத்திமரம் (பிங்.) இறளி, இரலியெனவும் வழங்கும்.