பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்17

2- வது செய்யுளியல்.
 

6.

ஆர்வெண்பா வகவல்கலி வஞ்சிப்பா நான்கி
   னளவடிவெண் பாச்செப்ப லிசைமுச்சீ ரந்தங்
கூர்காசு பிறப்புநாண் மலர்முடிவீ ரடிவெண்
   குறள்குறள்வெண் பாவிரண்டா யோராசீ ராசு
நேருகினுந் தனிச்சொற்பெற் றொன்றிரண்டு விகற்பம்
   நேரிசைவெண் பாத்தனிச்சொ லின்றியடி நான்காய்ப்
பார்விகற்ப மொன்றுபல வின்னிசைவெண் பாவப்
   படியடியீ ராறுவரும் பஃறொடைவெண்பாவே         (1)
 

என்பது,     “ஆர்வெண்பா வகவல்கலி வஞ்சிப்பா  நான்கின்”எ-து
வெண்பா,   அகவற்பா,   கலிப்பா,  வஞ்சிப்பா  எனப்  பா  நான்காம்.
ஆரென்னும்   விதப்பினா  லினமாவன:-  தாழிசை,  துறை,   விருத்தம்
எனவரும்.   அவையாவன:-வெண்பா,   வெண்டாழிசை,    வெண்டுறை,
வெளிவிருத்தம்     எனவும்;     ஆசிரியப்பா,      ஆசிரியத்தாழிசை,
ஆசிரியத்துறை,  ஆசிரியவிருத்தம்  எனவும்;  கலிப்பா,   கலித்தாழிசை,
கலித்துறை,   கலிவிருத்தம்   எனவும்;   வஞ்சிப்பா,   வஞ்சித்தாழிசை,
வஞ்சித்துறை,  வஞ்சி  விருத்தம்  எனவும்  வரும்.  இவற்றிற்குதாரணம்
முன்னர்க்காட்டுதும்.   “அளவடிவெண்பாச்   செப்பலிசை   முச்சீரந்தங்
கூர்காசு    பிறப்புநாண்    மலர்முடிவு”   எ-து   நான்கு   பாவினுள்
வெண்பாவாவது,     அளவடியுஞ்     செப்பலோசையும்     முடிவிலடி
முச்சீருங்காசு   பிறப்பு   நாண்மலரென்னும்  முச்சீருள்   முடிவிற்சீரும்
பெற்று     வருமென்பது-வெண்பாக்களுக்குப்       பொதுவிலக்கணம்.
“ஈரடிவெண்குறள்” என்பது, இரண்டடியாய் வருவது குறள்வெண்பாவாம்.
“குறள்வெண்பா  இரண்டா  யோராசு மீராசு நேருகினுந் தனிச்சொற்பெற்
றொன்றிரண்டு   விகற்பம்  நேரிசை  வெண்பா”  எ-து  குறள்வெண்பா
இரண்டாயோராசுபெற்று   மீராசுபெற்றும்,  உம்மையாலோராசு  மீராசும்
பெறுதுமாய்;   எடுத்த   எதுகைக்   கேற்ற   தனிச்சொற்பெற்று   ஒரு
விகற்பமாகியு    மிருவிகற்பமாகியும்   வருவன   நேரிசை   வெண்பா;
“தனிச்சொலின்றி  அடிநான்காய்ப்பார்  விகற்பமொன்று  பல இன்னிசை
வெண்பா”  என்பது,  தனிச்சொல்லின்றி நாலடியா யொருவிகற்பமும் பல
விகற்பமுமாகி வருவன இன்னிசைவெண்பா. “அப்படி  அடியீராறு வரும்
பஃறொடை    வெண்பா”   என்பது   இன்னிசை   வெண்பாப்போலத்
தனிச்சொல்லின்றி     ஒருவிகற்பமும்     பலவிகற்பமும்       பெற்று
ஐந்தடிமுதலாகப்  பன்னிரண்டடியளவும்  வருவன  பஃறொடைவெண்பா.
இவற்றிற்குதாரணம்:-