பக்கம் எண் :
 
198

ஐந்தாவது

அ ல ங் கா ர ம்1

அ ல ங் கா ர ப் ப ட ல ம்2

143. இவ்வதிகாரத்தில் இன்ன இலக்கணங் கூறப்படும் என்பது

உரையுட லாக வுயிர்பொரு ளாக வுரைத்தவண்ணம்
நிரைநிற மாநடை யேசெல வாநின்ற செய்யுட்களாந்
தரைமலி மானிடர் தம்மலங் காரங்கள் தண்டிசொன்ன
கரைமலி நூலின் படியே யுரைப்பன் கனங்குழையே !

(இ-ள்.) சொல்லே உடலாகவும், பொருளே உயிராகவும், வண்ணங்களே நிறமாகவும், நடையே செலவாகவும் நின்ற செய்யுட்களென்னும் மானிடவராபரணங்களைப் பெயர் வேறுபாடு உணர்த்துதற்குத் தண்டியார் சொன்னபடியே இலக்கணஞ் சொல்லுவன் (எ-று.)

இவ்விடத்து மானிட வடிவம் முன்பேயுண்டாம். ஆபரணங்கள் பின்னை வேறொருவனாற் செய்து பூட்டப்படுவன. அதுபோலச் செய்யுட்கள் முன்பே உளவாய், அலங்காரம் பின்பொருவனாற் செய்திவற்றிற் பூட்டப்படுவனவல்ல. செய்யுள் உள்ள பொழுதே இவையும் உளவாதலில், ஆடையாபரணாதிகளால் அலங்கரிக்கப்படாநின்றதொரு மானிட வடிவிற்கேற்ப உருவகஞ் செய்தாரெனக் கொள்க. அலங்காரம் எனவே ஆடையாபரணாதி என எல்லாம் அடங்கும். அது என்போல எனின், இவனை அலங்கரிக்க என்ற பொழுதே எல்லாம் அடங்கினாற்போலவென்க. ஒருத்தி எல்லா வாபரணங்களும் பூண்டு நின்றாளேயாயினும், அவற்றின் மிக்கிருந்தது ஒன்றால் ஆரம் பூண்டு நின்றாள் என்றது போல, ஒரு செய்யுட்குப் பல அலங்காரமாயினும் மிக்கதொன்றால் வழங்குக. இரண்டு ஒத்திருந்ததாகில், அதனை அவ்விரண்டின் பெயரானும் வழங்கினுமிழுக்காது. இரண்டுக்கு மேற்பட்டிருக்கில்


1. 'அலங்காரத்தை உணர்த்தும் அதிகாரம்' என்னும் பொருளினதாகிய அலங்கார அதிகாரம் என்னுந் தொடர்மொழி ஈண்டு வருமொழி நீங்கப் பெற்று அலங்காரம் என்று நின்றது. இது சொல்லின்பம் பற்றி இங்ஙனம் அமைக்கப்பெற்றது போலும் !

2. இஃது அலங்காரத்தை உணர்த்தும் படலம் என்றாம்.