‘பொலபொல வென வுதிர்ந்தது கண்ணீர்’
‘வள்வள்’ என்று நாய் குரைக்கும்!
‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’
‘மளமள வெனத் தேர்தல் நடந்தது’.
பளீர் என அறைந்தான்: சுள்ளெனப்பட்டது; கதுமென எழுந்து
(பெரிய. பு) என்பன இரட்டாமையின் வெறும்
குறிப்பொலிச் சொல்லாயின.
துடிதுடித்தான், சுறுசுறுப்பு என்பன கூறு பொருளுடைத்தேனும்
முன்னொட்டுப்
பொருளின்மையின் இரட்டைக்கிளவியே.
‘சடுகுடு’வை இங்கமைக்க. தைத்தாள் தையற் சடுகுடுப் பொறியால் (குடும்ப விளக்கு.)
பண்படை
300. நூ: ‘இனச்சுட்டில்லாப் பண்படைப் பெயர்ச்சொல்
வழக்காறல்ல: செய்யுளாறே.’
பொ:
இனம் பிரித்துச்சுட்டாத பண்படையோடு வரும் பெயர்ச்சொல்
வழக்கில் இல்லை; செய்யுட்களில்
வரும்.
சா:
செஞ்ஞாயிறு, வெண்ணிலவு: என்பன செய்யுட்கண்
இனச்சுட்டில்லாப் பண்படைப் பெயர்ச்சொல்.
மின்விசிறி; மகிழ்வுந்து
முதலியன இனச்சுட்டுள்ள பண்படை வழக்கு. காற்பந்து, இரட்டை மாட்டு
வண்டி என்ற மிகு வழக்கும் இற்றே.
301. நூ: சினைமுதற் கோரடை வழக்கே: ஈரடை
சினைமுதற் சாருதல் செய்யுட்காகும்.
பொ:
சினைக்கும் முதலுக்கும் ஓரடை செறிதல் வழக்காம். அவற்றிற்கு
இரண்டடை பொருந்துதல் செய்யுளாம்.
சா:
வ: பச்சைக்கிளி, மலைப்பழம், அடுக்கு மல்லிகைச்செடி செ:
முழங்குதிரைப் புனலருவி (குற்றாலக்குறவஞ்சி.)
செழுநீர்ப் புனற்கங்கை
(தேவாரம்) என்பனவும், செங்கால் நாராய் என்பதும் செய்யுட்காதல்
கொள்க.
முதல்
- சினை
302. நூ: ‘முதலை ஐயுறின் சினையைக் கண்ணுறும்
அதுமுதற் காயின் சினைக்கை யாகும்.’
பொ:
முதற்பொருளை ஐ உருபு பொருந்தினால் சினையை ஏழன் உருபு
(கண்) பொருந்தும். ‘அது’ உருபு முதலுக்கு
வந்தால் சினைக்கு ஐ உருபு
வரும்.
அது என்பதை இரட்டுற மொழிவான் சுட்டாக்கிமேல் இல்லுருபைச்
சுட்டிற்றெனவுமாம்.
|